பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்றைய சூழ்நிலை 29 இயக்கமாகிவிட்டது. வீறுடைய இயக்கமாகக் கிளைத்துவிட்டது. ஒற்றை நாடியாக விளங்கினாலும் காந்தியெனும் பெருங்காந்தம், நாட்டின் மூலைமுடுக்குகளிலிருந்து எண்ணற்ற 'இரும்பு'களை இழுத்தது. ஈரோட்டின் இரும்பு மனிதர், ஈ. வே. ராமசாமியையும் இழுத்தது. 1919இல் நகராட்சித் தலைவர் பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு, ஈ. வே. ரா. அனைத்திந்திய காங்கிரசில் சேர்ந்தார்.