பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 காங்கிரசு பணி ஈ.வே. ராமசாமியின் பிறவிக் குணங்களில் ஒன்று, எதை யெடுத்துக்கொண்டாலும் அதில் ஒருமனப்பட்டு, ஆர்வத்தைப் பொழிந்து, ஆற்றலை ஒருமுகப்படுத்தி, இதைவிடச் சிறப்பாகப் பிறர் எவரும் செய்யமுடியாது என்னும் வகையில் செயல்படுவது ஆகும். ரௌலட் சட்ட எதிர்ப்பு ஈ. வே. ராமசாமி, காங்கிரசில் சேரும் சமயம், இந்திய நாடு முழுவதும் ஒருவகை கொந்தளிப்பில் மூழ்கியிருந்தது. நாட்டின் நாலா பக்கங்களிலும் விடுதலை உணர்வு கொழுந்துவிட்டு எரிவதைக் கண்ட ஆங்கிலேய 'ஆட்சிக்கு கிலிபிடித்தது. அக்கிலி, அடக்குமுறையைக் கையாளத் தூண்டிற்று. அதற்காக, 'ஆள் தூக்கிச் சட்டம்', 'செய்தித்தாள், சஞ்சிகை, அச்சகக் கட்டுப்பாடு சட்டம்' முதலிய கொடிய சட்டங்கள் உருவாயின. அக்கொடிய சட்டங்களை பொதுமக்கள் வெறுத்தார்கள். ஆயினும், ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகப் பொதுமக்களின் உணர்வுகளைப் பொருட் படுத்தாமலே வளர்ந்த பரம்பரைகளைச் சேர்ந்த சிலர் அடக்கு முறைகளுக்குத் துணை நின்றார்கள். தமிழ்நாடும் தன் பங்கிற்கு ஒரு துரோகியை வழங்கிற்று. திரு. குமாரசாமி சாஸ்திரி என்பது அவர் பெயர். அவரும் அவருடைய சகாக்களுமாகச் சேர்ந்து உருவாக்கிய 'ரௌலட்' சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க, காந்தியார் நாளொன்றைக் குறித்தார். குறிப்பிட்ட நாளன்று நாடு முழுவதும் கண்டனக் கூட்டங்கள் நடந்தன. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அமிர்தசரஸ் என்னும் நகரில், ஜாலியன் வாலாபாக் என்னும் பூங்கா ஒன்று இருந்தது. அதன் மூன்று பக்கங்களிலும் உயர்ந்த சுவர்கள். ஒரே பக்கந் தான் நுழைவாயில், அப்பூங்காவில், ஏராளமான பொதுமக்கள் கண்டனம் தெரிவிக்கக் கூடினார்கள். அந்நகரின் சட்டம் ஒழுங்கைக் காக்கவேண்டிய பொறுப்பில் இருந்த ஓடையர் என்னும் இரத்தவெறியன் அங்கு வந்து சேர்ந்