பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காங்கிரசு பணி 31 தான்; இருந்த ஒரே நுழைவாயில் வழியாக மக்கள் கலைந்து போவதற்கும் போதிய நேரம் கொடாமல், சுட்டுத்தள்ள கட்டளை யிட்டான். வெளியேற முடியாது கூண்டுக்குள் சிக்கிய குருவிகளின் நிலைக்கு மக்கள் ஆளானார்கள். கையலுக்கும் மட்டும் சுட்டுக் கொன்றார்கள். அதே அமிர்தசரசில், அனைத்திந்திய காங்கிரசு மாநாடு, மோதிலால் நேருவின் தலைமையின்கீழ் கூடிற்று. ஈ.வே.ராமசாமி, அம்மாநாட்டுக்குச் சென்று பங்குகொண்டார். திரு. வி. கல்யாண சுந்தரம், என். தண்டபாணி ஆகியோரும் உடன் சென்றார்கள். கப்பலோட்டிய தமிழர் வ. உ. சிதம்பரம் அவ்வமயம் நொடிந்து போயிருந்தார். அமிர்தசரசு வரை சென்று வர பணமில்லை. ஈ.வே. ராமசாமி, கொள்கைப் பற்றாளரை என்றும் கைவிட்ட தில்லை. தன்னுடைய செலவில் அறிஞர், தியாகி, வ.உ.சி.யை அழைத்துச் சென்றார். எங்கே சென்றாலும் வழக்கு ஒன்று காத்திருக்கும் பெரியாருக்கு. பெரியார் விரும்பியபடி, சென்னை ஆலைத் தொழிலாளர் சார்பில் திரு. தண்டபாணியின் தலைமையில் பத்து பிரதிநிதிகள் சென் றார்கள். தொழிலாளர்கள் சார்பில் யாரையும் பிரதிநிதிகளாக ஏற்கக்கூடாதென்று இங்கிருந்து சென்ற பிரமுகர் ஒருவர் வழக் காடினார். ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று பெரியார் போராடி னார். இந்த ரகளையில் மோதிலால் நேருவே தலையிட்டு, பெரியார் விரும்பியபடி முடிவு சொன்னார். ஒத்துழையாமை இயக்கம் 1920ஆம் ஆண்டு, காந்தியார், ஒத்துழையாமை இயக்கத்தை உரிமைப்போர் முறையாக அறிவித்தார். அதன் முதற்கூறு, காங்கிரசு இயக்கத்தைச் சேர்ந்த அனைவரும், ஆங்கில ஆட்சியின் தயவால் கிடைத்த பொறுப்புகளை விட்டுவிடவேண்டும். அன்னிய ஆட்சியோடு தொடர்புடைய எப்பதவியையும் ஏற்கக்கூடாது. ஈ. வே. ராமசாமிக்கு, தியாகம் என்பது இளமையிலேயே கைவந்த கலை. பொது நிலையங்களில் வகித்து வந்த இருபத்தொன்பது பதவிகளையும் துச்சமெனக் கருதி, தூக்கி எறிந்துவிட்டார். காங்கிரசுக்கும் இந்தியாவின் விடுதலைக்கும் முழு நேரம் தொண் டாற்ற வேண்டுமென்னும் ஆர்வத்தில், ஆண்டிற்கு இருபதாயிரம் ரூபாய் வருமானம் தந்த - அந்தக்கால இருபதாயிரம் ரூபாய்- வாணிபத்தையும் நிறுத்திவிட்டார். இரவு பகல் பாராது, பெரிய நகரம், சிறிய பட்டிக்காடு என்று பொருட்படுத்தாமல், பம்பரம் போன்று சுழன்று சுழன்று, தற்குறித் தமிழர்களிடையே நாட்டுப்