பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 புரட்சியாளர் பெரியார் பற்றை எழுப்பினார்; உரிமை வேட்கையை வளர்த்தார்; தியாக மனப்பான்மையைப் பரவலாகப் பயிரிட்டார். ஈ. வே. ராமசாமி செல்வத்தில் வளர்ந்தவர், செல்வக் களியாட் டில் திளைத்தவர், நண்பர்கள் நிறைந்தவர். அத்தகைய ஈ. வே. ராமசாமியின் காங்கிரசுக் கோலம் என்ன கோலம்! பளபளக்கும் வேட்டியெங்கே! ஒளிவிடும் 'கோட்டு' 'கோட்டு' எங்கே! மின்னும் தலைப்பாகை எங்கே! 'இதுவா ஈரோட்டுப் பெரு வணிகர், நகர மன்றத் தலைவர் ராமசாமி! கோணிப்பையோடு போட்டியிடும் முரட்டு கதர் வேட்டி. சொக்காயிலும் சேராத கோட்டிலும் சேராத தொள தொள கதர்ச் சொக்காய். சுமையான கதர் அங்கவஸ்திரம். 'ஏன் சாமி உங்களுக்கு இந்தத் தலைவிதி?' என்று கண்டோர் மலைக்கும் மாற்றுக்கோலம் ஈ.வே.ரா.வுக்கு எளிதாகக் கைவந்துவிட்டது, ஈ.வே. ராமசாமியின் பேச்சில் உண்மை ஒளிவிட்டது. திண்மை மிளிர்ந்தது. தெளிவு பளிச்சிட்டது. எளிமை பொங்கிற்று. எனவே ராமசாமியைக் கேட்க, நெடுந்தொலைவிலிருந்தும் வந்து ஆயிரக் கணக்கில் குழுமினர். அது காங்கிரசை வளர்த்தது; காந்தியத்தை விதைத்தது; விடுதலைச் சுடரைத் தூண்டியபடியே இருந்தது. ' கேட்டார் பிணிக்கும் தகையவாய் கேளாரும் வேட்ப மொழிவதாஞ் சொல்.' நாவன்மைக்கு இப்படி இலக்கணம் வகுத்தான் வள்ளுவன். அதற்கு இந்நூற்றாண்டின் நடமாடும் இலக்கியமாக விளங்கியவர் ஈ. வே. ராமசாமி ஆவார். காந்தியத் திட்டங்களில் ஒன்று விலக்குதல்; கதரைப் பரப்புதல். ம அன்னிய ஆடைகளை ஈ.வே. ராமசாமி அன்னிய ஆடைகளைக் களைந்துவிட்டார். கதராடை அணிந்தார். இதை முன்னரே கூறிவிட்டேன். இவர், தன் குடும்பம் முழுவதையுமே கதரணியச் செய்தார். எண்பது வயது மூதாட்டியாக விளங்கிய தனது தாயார் சின்னத்தாய் அம்மாளையும் கதர் அணியவைத்தார். இதைப் பெரியாரின் கொள்கை வெறி என்பதா? தனயனின் தொண்டிற்கு துணை நிற்கத் தயங்காத தாய்மைப் பண்பு என்று போற்றுவதா? ஈ.வே. ராமசாமி, கதர் மூட்டைகளை, ஊர் ஊராகக் கொண்டு சென்று, விற்பனை செய்தார். சீமான் வீட்டுப் பிள்ளையே வந்து விட்ட பிறகு அக்கால மக்கள் மறுப்பார்களா? கதர் உற்பத்தி செய்ய கதரை அணிய முன் வந்தார்கள். கதர் இயக்கத்தைத் தமிழகத்தில் பரப்பியதில் பெரியாருக்கு சிறந்த பங்கு உண்டு. திருச்செங்கோட்டுக் கதர் ஆசிரமத்தை ஈ. வே. ராமசாமியே திறந்து வைத்தார்.