பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காங்கிரசு பணி குருகுலப் போராட்டம் 38 கண் ஒத்துழையாமை இயக்கத்தில் ஆங்கிலேய ஆட்சியின் காணிப்பில் நடக்கும் கல்வி நிலையங்களைப் புறக்கணிக்கும்படி காந்தியார் பணித்தார். சிற்சில இடங்களில் மாற்று கல்வி நிலையங்கள் தொடங்க முயன்றார்கள். திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி என்னும் ஊரில் காங்கிரசின் நிதி உதவியோடு முன்னணிக் காங்கிரசுக்காரராகக் கருதப்பட்ட வ.வே.சு.அய்யர் பொறுப்பில் குருகுலமொன்று தொடங்கப்பட்டு, நடந்துகொண் டிருந்தது. அக்குருகுலம் எதற்காக நிறுவப்பட்டது? காந்தியடி களின் கட்டளைப்படி, ஆங்கிலேய ஆட்சியின் இயக்கத்தில் நடந்த பள்ளிகளுக்குப் போகாமல் நின்றுவிடும் சிறுவர்களுக்கு, இந்தியப் பண்பின் அடிப்படையிலான கல்வி அளிப்பதற்காக நிறுவப்பட்டது. உறையுள் பள்ளியான அதில் பார்ப்பன பிள்ளைகளும் பார்ப்பன ரல்லாத பிள்ளைகளும் சேர்ந்து படித்தார்கள். பிற்காலத்தில், சென்னை மாநிலத்தின் முதல் அமைச்சராகி, நல்லாட்சி நடத்திய, திரு. ஓமந்தூர் இராமசாமி ரெட்டியாரின் மகனும் சேர்ந்து படித்தார். வெளியே இருந்த பீடை, குருகுலத்திற்குள்ளும் நுழைந்து விட்டது. பார்ப்பனப் பிள்ளைகள் தனியாகவும் மற்றவர்கள் வேறு பந்தியாகவும் உணவருந்தும் இழிவு நடைமுறையானது. தமிழர்கள் அத்தனைபேரும் தடித்த தோலர்கள் அல்லர். எனவே உணவு உண்பதில் பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதார் என்று பிரித்து வைப்பதை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தனர். அதன் விளைவாக பெரியார், திரு. வி. க., டாக்டர் வரதராசுலு ஆகியோர், தனிப் பந்தி முறையை எதிர்த்தும், சமபந்தி உணவு முறையை ஆதரித்தும் போராட்டம் நடத்தினார்கள். வ.வே.சு. அய்யர் அடம்பிடித்தார். குருகுலம் மூடப்பட்டது. வைக்கம் போர் தீண்டாமை, இந்தியாவில் பன்னெடுங்காலமாகத் தொடரும் கொடுமை. புத்தருக்குப் பிறகு எவரும் அதை ஒழிக்க, இயக்கம் நடத்தவில்லை எனலாம். காந்தியத் திட்டத்தில் தீண்டாமை யொழிப்பு சேர்ந்திருந்தது. ஈ. வே. ரா. இயற்கையான உந்துதலால் சிறுவயதிலேயே, சாதி வேற்றுமைத் தடைகளுக்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார். எனவே தீண்டாமை யொழிப்புப் பணி, ஈ. வே. ராவுக்கு தித்தித்தது. அதில் அவருக் கிருந்த ஆழ்ந்த பற்றைச் சோதிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.