காங்கிரசு பணி விட்டு, திரு. ராமசாமி சுயமரியாதை இயக்கத்தைத் துவக்கினார். அவரது மனம் இதுபோது மிகவும் முக்கியமான சமுதாயத் துறை யில் ஈடுபட்டிருக்கிறது. எனது நாட்டில் சுயமரியாதைக் கருத்து விதைகள் இவரால் முதன் முதலாக ஊன்றப்பட்டன. மிகுந்த விளைவு கட்டாயம் ஏற்படும்.' சாதி ஒழிப்பிற்காகவும் தீண்டாமை ஒழிப்பிற்காகவும் அயராது பாடுபட்ட பெரியாரைப்பற்றி சென்னை சட்டமன்றத்தில் தாழ்த்தப்பட்டவர்களின் பிரதிநிதியாக விளங்கிய திரு. என். சிவராஜ், பி.ஏ., பி.எல். 1928இல் கூறும்போது, 'தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களுக்காக மகத்தான வேலை செய்திருக்கும் திரு. ஈ.வே. ராமசாமி அவர்களை எங்கள் சமூகத்தார் என்றும் மறக்கவேமுடியாது. மறக்கவே முடியாது. வைக்கத்தில் அவர் செய்துள்ள வேலை, அளவிடற்பாலது. அவர் ஒரு காலத்தில் தேசியப் போராட்டத்தில் அமிதவாதக் கொள்கை உடையவராக இருந்தார். சீர்திருத்தக் காரர்கள் பின்பற்றத்தக்க தலைவர் ஈ. வே. ராமசாமி ஒருவரே யாவர்.' வைக்கம் வீரர் ஈ. வே. ராமசாமி, உரிமைப் போரில் வெற்றி வாகை சூடி, சூடி, தமிழகத்தை வலம் வந்தார். வெள்ளம்போல் தமிழர் கூட்டம், கூட்டம், வீரங்கொள் தமிழர் கூட்டம்' அவரை மொய்த்துக்கொண்டது. அந் நிலையில், மற்றோர் துறவுக்கு புயல் உருவாகியது. 'விடுதலை; விரைவான விடுதலை; என் தாய்த் திருநாட்டிற்கு முழு விடுதலை.' கனவிலும் நனவிலும் இதுவே, ஈ. வே. ராமசாமி யாரின் சிந்தனை; இதுவே அவருடைய பேச்சு; இதுவே அவருடைய எழுத்து. இப்படி, விரைவில் விரைவில் விடுதலை பெற்றாகவேண்டு மென்னும் ஒரே நினைப்பில் மூழ்கியிருந்த ஈ.வே. ராமசாமி, விடுதலைக்குத் தடைகளாக இருப்பனவற்றைப்பற்றி சிந்திக்கத் தலைப்பட்டார். பொதுமக்களிடம் உரிமை உணர்வு இல்லாமையைக் கண்டார். தமது சொல்லாலும் எழுத்தாலும் அதை வளர்க்கப் பாடுபட்டார்; முழு மூச்சோடு பாடுபட்டார். அடுத்து சென்னை மாகாணத்தில் நீதிக் கட்சியும் பிற மாகாணங்களில் சிற்சில நிறுவனங்களும் மெல்ல மெல்ல அரசியல் உரிமைபெறுவதே நல்லது' என்று குரல் எழுப்புவதைக் கண்டார். அதன் காரணத்தை ஆய்ந்தார். அச்சம் என்னும் வேரிலிருந்து அவநம்பிக்கை என்னும் கிளையாக அந்தக் குரல் எழும்புவதை அறிந்தார். ஏன் அச்சம் என்று துருவிப் பார்த்தார். சாதிகள் நிறைந்த நாட்டில், ஒரு சில பிரிவினரே பெரும் பதவி களில் நிறைந்து கிடந்தார்கள். சமவாய்ப்பு இல்லாமையும், சம
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/51
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை