40 புரட்சியாளர் பெரியார் வாய்ப்புகளைப்பற்றி பேசவும் அனுமதியாத நிலையும் பொது மக்களிடம் அச்சத்தையும் அவ நம்பிக்கையையும் வளர்த்திருந்தன. ஆங்கிலேய ஆட்சியின்போதே நமக்குரிய பங்கைக் கொடுக்க மறுப்பவர்கள், நாளை தன்னாட்சி கிடைத்துவிட்டால், நம்மை அண்டவும் விடமாட்டார்கள் என்னும் அச்சமும் அவநம்பிக்கை யும் படித்த பார்ப்பனரல்லாதாரிடமும் முஸ்லீம்களிடமும் பரவலாக இருந்தன. அவர்கள் அச்சம் அடிப்படை இல்லாதது அல்ல; அவநம்பிக்கை பொருளற்ற பீதியல்ல. எல்லா வகுப்பார்களுக்கும் பொதுத் தேர்தல் பதவிகளிலும் வேலைகளிலும் ஓரளவு நியாயமான பங்கு போட்டுக் கொடுக்க வேண்டும் என்பது நீதிக் கட்சியின் கொள்கைகளில் உயிர் நாடியானதாகும். அப்படிப்பட்ட முறை, நடைமுறையாவதற்கு முன்பு வெள்ளையர் வெளியேறிவிட்டால், மேல் சாதிக்காரர் ஆதிக்கமும் ஆக்கிரமிப்பும் அதிகமாகிவிடும் என்று பொதுமக்கள் அஞ்சினார்கள். அதையே நீதிக் கட்சி எடுத்துரைத்தது. இவற்றைப்பற்றி ஈ. வே. ராமசாமி ஆழ்ந்து சிந்தித்தார். தேசிய உணர்வுடைய பார்ப்பனரல்லா தாரை ஓரணியில் கொண்டு வருதல் நல்லது என்று கருதப்பட்டது. சென்னை மாகாண சங்கம் என்ற பெயரில் ஒரு சங்கம் அமைக்கப்பட்டது. தொடக் கத்தில் திரு. குத்தி. கேசவப் பிள்ளை என்பவரைத் தலைவராகக் கொண்டு ஏற்படுத்தப்பட்ட சென்னை மாகாண சங்கத்திற்கு ஈ.வே.ரா. ஆதரவு தந்தார். நீதிக் கட்சி பற்றாளர்களை அச்சங்கம் மாற்ற முடியவில்லை. ஈ.வே.ரா. தளரவில்லை. தொடர்ந்து சிந்தித்தார். வகுப்புரிமை 'விரைவில் தன்னாட்சி உரிமை பெற, ஏராளமானவர்கள் ஒன்று சேர்ந்து போராடவேண்டும். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை, கொள்கை அளவில், காங்கிரசு ஏற்றுக்கொள்ளவேண்டும். அப்படிச் செய்தால், நீதிக் கட்சி, வேரற்றுப்போகும். அந்நிலையில் பார்ப்பனரல்லாதவர்கள் பெருவாரியாக காங்கிரசை யும் அதன் விடுதலைப் போராட்டத்தையும் ஆதரிப்பார்கள்.' இந்த முடிவுக்கு வந்தார், ஈ. வே. ராமசாமி, எனவே, காங்கிரசு மேடைகளிலும் மாநாடுகளிலும் வகுப் புரிமைக்கு ஆதரவாகப் பேசி வந்தார். 1920இல் திருநெல்வேலியில் மாகாண காங்கிரசு மாநாடு நடந்தது. ஈ. வே. ரா. அங்கே, வகுப் புரிமை தீர்மானத்தைக் கொண்டுவந்தார். விஷயாலோசனைக் குழுவில் அது நிறைவேறியது. ஆனால் பொது மாநாட்டிற்குத்
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/52
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை