காங்கிரசு பணி 41 தலைமை தாங்கிய திரு. எஸ். சீனிவாச அய்யங்கார், 'இது பொது நலத்திற்குக் கேடு' என்று கூறி அனுமதிக்காமல் மறுத்துவிட்டார். அடுத்து 1921இல் மாகாண மாநாடு, தஞ்சாவூரில் கூடியது. வகுப்புரிமை தீர்மானத்தை, FF. Cal. TIT. கொண்டுவந்தார். அப்போது, இராஜாஜி தலையிட்டு, 'கொள்கையாக வைத்துக் கொள்வோம்; தீர்மான உருவில் வேண்டாம்' என்று கூறி சமாளித்தார். 1922இல் திருப்பூரில் மாகாண மாநாடு நடந்தது. மீண்டும் ஈ.வே.ரா. வகுப்புரிமை தீர்மானத்தைக் கொண்டுவந்தார். வாதம் கடுமையாயிற்று. ஈ. வே. ரா. மனுதர்ம சாஸ்திரத்தையும் இராமாயணத்தையும் கொளுத்த வேண்டுமென்று அம் மாநாட்டி லேயே முழங்க நேரிட்டது. வகுப்புரிமை பெறுவதற்காக அவ்வளவு தொலைவு போகத் தயாராக இருந்தார். ஆனாலும் தீர்மானம் நிறைவேறவில்லை. மீண்டும் 1923இல் சேலத்தில் கூடிய மாகாண மாநாட்டில் ஈ.வே.ரா. அதே தீர்மானத்தை முன் மொழிந்தார். கலகம் ஆகும் அளவிற்கு நிலைமை முற்றிவிட்டது. ஓட்டுக்கு விடாமல் சமாளித்துக்கொண்டார்கள். 1924இல் திருவண்ணாமலையில் கூடிய மாநாட்டுக்கு ஈ.வே. ராமசாமி தலைமை ஏற்றார். அவர் தலைமையுரையில், குலையா சேர்ந்த தென்னிந்தியாவில் இந்து முஸ்லீம் ஒற்றுமை திருப்பினும் இந்துக்களுக்குள் ஒற்றுமை ஒற்றுமை குலைந்து வருவது, உண்மை. முதலாவது பிராமணர்-பிராமணரல்லாதார் நிலையைச் சிறிது சிந்திப்போம். ஒரு மதத்தைச் இவர்களுக்குள் வேற்றுமையுணர்வு தோன்றுவானேன்? வேற்று மைக்கு அடிப்படையான காரணங்கள் இருத்தல்வேண்டும். காரணங்களை உணர்ந்து ஒற்றுமைக்கு உழைக்க தேச பக்தர்கள் முயலவேண்டும். அக் ஒரு காங்கிரசுவாதியாயிருந்த டாக்டர் நாயர், திடீரென, கட்சியைத் தோற்றுவிக்க காரணங்களாய் நின்றவைகள் எவை களோ, அவைகள் இன்னும் நிற்கின்றனவா இல்லையா என்பதை நேயர்கள் கவனிப்பார்களாக. அக்காரணங்கள் அழிந்துவிட்ட தாக எனக்குத் தோன்றவில்லை. அவைகள் தமிழ்நாட்டில் ஊர்ந்துகொண்டிருக்கும்வரை, தமிழ்நாட்டில் பிராமணர் - பிராமணரல்லாதார் ஒற்றுமை நிலவுதல் அரிதே. தேச சேவையில் ஈடுபட்டுத் தமிழ்நாட்டுக் காங்கிரசில் காரிய தரிசியாக வும் தலைவராகவும் இருந்து பெற்ற அனுபவத்தை ஆதாரமாகக் கொண்டே நான் இங்கே பேசுகிறேன்' என்று வெளிப்படையாகக்
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/53
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை