பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 புரட்சியாளர் பெரியார் கூறினார். இம் மாநாட்டிலும் வகுப்புரிமைத் தீர்மானம் நிறை வேறவில்லை. அடுத்து 1925ஆம் ஆண்டு நவம்பரில் காஞ்சிபுரத்தில் தமிழ் மாகாண மாநாடு கூடியது. திரு. வி. கலியாண சுந்தரம் தலைமை ஏற்றார். தலைவர், வகுப்புரிமைத் தீர்மானத்தைக் கொண்டுவருவதற்கே அனுமதிக்கவில்லை. ஆறாவது முறையாக, வகுப்புரிமை நிராகரிக்கப்பட்டது. ஈ.வே. ராமசாமி வெகுண்டு வெளியேறினார்; காங்கிரசைவிட்டு விலகினார். அப்போது தமிழ்நாட்டில் காங்கிரசின் நிலை என்ன? 'குடியரசு' தலையங்கம் (1-4-1925) அதைப் படம் பிடித்துக் காட்டு கிறது. அப் படம் இதோ. 'ஒத்துழையாமை இயக்கம் காந்தியடிகளால் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில், தமிழ்நாடுதான் அவ்வியக்கத்திற்கு முதன் முதலாக ஆதரவு அளித்தது. எண்ணிக்கைக்குக் கிடைக்காத ஏதோ சிலர் சொந்த முன்னேற்றத்திற்கு அல்லது வேறு பல காரணங்களைக்கொண்டு பின்வாங்கியிருந்தபோதிலும் தமிழ் மக்கள் சாதி, வகுப்பு, வித்தியாசமின்றி ஒத்துழையாமையின் திட்டங்களில் உடல் பொருள் ஆவி மூன்றையும் சிறிதும் மதியாது தியாகமே கடவுள், தியாகமே வீட்டைப் பெற வைப்பது. தியாகமே உலகம் என நினைத்து எல்லாவற்றையும் துறந்த துறவிகள்போன்று தொண்டாற்றி வந்ததை உலகம் கண்டு வியக்கிறது. இந்த நிலைக்குப் பெரிதும் காரணமாக இருந்தவர் பெரியார். இருப்பினும் தான் வளர்த்த, நம்பிக்கை வைத்திருந்த இயக்கத்தை விட்டு தயங்காது வெளியேறினார்.