பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 தன்மான இயக்கப் பணி காங்கிரசைவிட்டு வெளியேறிய ஈ. வே. ராமசாமி, 1926இல் நடந்த மாகாண சட்டமன்ற பொதுத் தேர்தலில், எந்தக் கட்சிக் கும் ஆதரவு தராமல் விலகி இருந்தார். ஆனால், அத்தேர்தலில் நீதிக் கட்சி தோல்வி கண்டபின், அதற்கு ஆதரவுகொடுக்க முன் வந்தார். காரணம்? நீதிக் கட்சியின் சாதனை நீதிக் கட்சி, மாகாண இரட்டை ஆட்சி முறையில், ஆறாண்டு காலம் அமைச்சரவை அமைத்தது; திறம்பட ஆட்சி செய்தது. நீதிக் கட்சியின் ஆட்சியின்போதுதான் சென்னை மாகாண தொடக்கக் கல்விச் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டத்தை நிறைவேற்றியதின்மூலம், நீதிக் கட்சி, கல்வி வளர்ப்பில் முன்னோடி யாகத் திகழ்ந்தது. அச்சட்டம் கொடுத்த வாய்ப்பினைப் பயன் படுத்தி, சென்னை மாநகராட்சி, நீதிக் கட்சியின் கையிலிருந்த போது, கட்டாய இலவசக் கல்வியைப் புகுத்தியது. இக் கொள்கை. ஈ.வே. ராமசாமிக்குப் பெரிதும் பிடித்தமானது. அடுத்து, சென்னை மாகாண இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டத்தை நீதிக் கட்சி அமைச்சரவை நிறைவேற்றியது. அச்சட்டத் தின் நோக்கம் என்ன? கோயில், சத்திரம் முதலிய இந்து அறநிலை யங்களைப் பராமரிப்போர் அந்நிலையங்களின் வரவு செலவுக்கு, சொத்துக்கு பொதுமக்களுக்குக் கணக்குச் சொல்லவேண்டும். பொதுமக்கள் சார்பில், பெரிய அரசு அதிகாரி அவற்றைக் கண் காணிப்பார். ஈ. வே. ராமசாமி காங்கிரசில் சேர்வதற்குமுன் 'ஈரோட்டிலும், கோவை மாவட்டத்திலும் அறநிலையக் குழுக் களில் பொறுப்பு வகித்திருந்தார். அப்போது, கோயில்களில் நடக் கும் பணஞ் சுருட்டல்களைக் கண்டு, தடுத்து, பல கோயில்களில் வரும்படிகளையும் சொத்துக்களையும் பெருக்கினார். ஆகவே, இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டத்தின் தேவையை ஈ.வே. ராமசாமியால் புரிந்துகொள்ள முடிந்தது. அது செம்மையாகச் செயல்பட்டால், நல்ல நன்மைகள் விளையக்கூடும் என்பது அவருக் குப் புலனாயிற்று.