பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 புரட்சியாளர் பெரியார் மூன்றாவதாக, நீதிக் கட்சி பலசாதி மக்களுக்கும் அரசின் அலுவல கங்களில் பங்கு கிடைப்பதற்காக, வகுப்புரிமை ஆணைகளைப் போட்டு நியாயம் வழங்க முனைந்தது. நான்காவதாக, அன்றிருந்த அரசியல் கட்சிகளில் நீதிக் கட்சியில் தான் சாதி வேற்றுமையுணர்ச்சி குறைவாக இருந்தது. ஆகவே ஈ. வே. ராமசாமி நீதிக் கட்சிக்கு ஆதரவாகக் குரல் எழுப்பினார். நீதிக் கட்சியோடு சேர்ந்து வகுப்புரிமைக்குப் போராடினார். தீண்டாமை ஒழிப்பிற்கு முரசொலித்தார். சமத்துவத்திற்கு வாதாடினார். பார்ப்பனரல்லாதார் விடிவெள்ளியைக் கண்டது போன்று எழுந்தனர். ஈ.வே. ராமசாமியின் நாட்டம் மனிதர்களை மனிதர்களாக வாழவைப்பதில் முனைந்தது. அதன் விளைவே தன்மான இயக்கம். தன்மான இயக்கம் ஏன் தேவைப்பட்டது? இன்றும் தேவைப் படுகிறது? அவ்வியக்கம் எதற்காகப் பாடுபட்டது? இன்றும் பாடு படுகிறது? முதல் சுயமரியாதை மாநாடு திருவாளர் பி.டி. ராஜன் அவர்களை எவரும் தீவிரவாதி யென்றோ, புரட்சியாளர் என்றோ குற்றஞ்சாட்ட முடியாது. செங்கற்பட்டில் 1929ஆம் ஆண்டு பிப்ரவரி 17, 18 நாட்களில் நடந்த முதல் சுயமரியாதை மாநாட்டில் கொடியேற்றி வைத்து அவர் உரையாற்றியதாவது: மனிதனுக்கு மனிதன் வேற்றுமையையும் வகுப்புக்கு வகுப்பு பிரிவினையையும் உண்டாக்குகிற ஒரு சமுதாய கட்டுப்பாட்டை யும் பிறப்பினால் உயர்வு தாழ்வு கற்பிக்கும் ஒரு முறையையும் சமூகத்தில் பெரும்பாலோரை ஆடு மாடுகளுக்கும் கேவலமாய் நடத்துவதற்கு ஏதுவான நடைமுறையையும் கோயில்களுக்குள் சாதியின் அடிப்படையில் பக்தர்களில் பலரைக்கூட செல்லக்கூடா தென்று தடுக்கும் கட்டுப்பாட்டையும் பெண்களை தட்டு முட்டு சாமான்களைப்போல் கருதும் சமுதாய முறையையும் ஒழிப்பதே இவ்வியக்கத்தின் நோக்கமாகும். 'எல்லார்க்கும் சம வாய்ப்பு தருதல்; ஆண்களும் பெண்களும் சட்டத்தின்முன்பும் வாழ்க்கையிலும் சமமாக வாழவைத்தல், எல்லோர்க்கும் சம வளர்ச்சி வாய்ப்புகளை அளித்தல், குடி மக்களுக்குள் ஒற்றுமையை வளர்த்தல், நாட்டின் இன்பதுன்பங் களில் எல்லோர்க்கும் சமபங்கு இருக்கச் செய்தல், குடிமக்கள்