தன்மான இயக்கப் பணி 45 இத்தகைய தங்கள் கடமைகள், உரிமைகள், இரண்டையும் உணரவைத்தல், ஆகியவை இயக்கத்தின் நோக்கங்கள் ஆகும். இயக்கத்திற்காக நெடுநாட்களாகக் காத்திருந்தோம். 'காரிருள் கௌவியுள்ள வேளையில்தான், இந்த மின்னொளிக் கீற்று வந்துள்ளது. தன்னலம், சோம்பல், அளவுக்கு மேற்பட்ட அச்சம், ஆற்றாமை, ஆகியவை விலகி, தன்னலமின்மை, ஆர்வம், ஆற்றல், துணிவு, நம்பிக்கை, ஆகியவற்றிற்கு இடம் கொடுக்கத் தொடங்கியுள்ளன. 'நம்முடைய சென்றகால வரலாற்றுக்கு மாறுபட்ட புதிய எதிர் கால வரலாற்றை உருவாக்குவது, இளைஞர்களின் பெரும் பொறுப்பாகும். இயக்கம் மறைந்தால் எவரே வாழ்வர்? இயக்கம் வாழ்ந்தால் எவரே மடிவர்?' என்று பி.டி. ராஜன் முழங்கியது, முழங்கியது, சோர்ந்த உள்ளங்களுக்கு உணர்வூட்டியது. அந்த முதல் சுயமரியாதை மாநாட்டைத் தொடங்கிவைத்த முதல் அமைச்சர் டாக்டர் சுப்பராயன், தமது உரையில், 'அரசியல் எதேச்சதிகாரத்தை எதிர்த்து ஆயிரம் பேர்கள் முழுங் கும்போது, ஒருவர்கூட, சமுதாய மறுமலர்ச்சிக்காகப் பாடுபடமுன் வருவதில்லை. சமுதாயத்தில் மக்களுடைய உரிமைகளைக் கட்டுப்படுத்தும் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும் தன்னாட்சி நாட்டைத் தாங்கி நிறுத்தமுடியாது என்னும் உண்மையை நாம் உணரவேண்டும். 'புரோகிதர்கள், அதிகார வர்க்கமாக எளிதில் மாற முடிவது வியப்பிற்குரியது அல்ல. சமுதாயத்துறையில் நம்முடைய குறை பாடுகளை நன்கு உணர்ந்தவர்கள் புரோகிதர்கள். அதை ஆதாய மாகக்கொண்டு வளர, தங்கள் திறமைகளை தீட்டி வைத்திருப்ப வர்கள் புரோகிதர்கள். அவ்வுணர்வையும் திறமைகளையும் அரசியல் துறைக்கு மாற்றுவது ஒன்றே, அவர்கள் செய்யவேண்டிய வேலை. மக்களுக்குச் சமூக நீதி வழங்க மறுக்கும் சமுதாயத்தி லிருந்து பொருளாதார அரசியல் சமத்துவத்திற்குப் போராடக் கூடிய தலைவர்கள் உருவாதல் அரிது. அரசியல் தன்மானத்திற்காக வேலை நிறுத்தஞ்செய்யும் கல்லூரி மாணவர்களில் எவர் நாள்தோறும் நடக்கும் சமூக இழிவு களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தாரென்று அறிய விரும்புகிறேன். 'அரசியல் விடுதலை கிடைத்தாலும் நாம் புரோகிதர்களுக்கு அடிமைகளாகவும் சாதியால் பிரிந்தவர்களாகவும், குழந்தை மணம்,
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/57
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை