46 புரட்சியாளர் பெரியார் விதவைக் கொடுமை ஆகியவற்றை ஏற்றுக்கொண்டு, ஏழைகளும் ஒடுக்கப்பட்டோரும் வந்தால், தீட்டாகிப்போகும் கடவுள்களைக் கும்பிடுவோர்களாகவும் மூட நம்பிக்கைகளில் மூழ்கியவர்களாகவும் இருக்கும்வரை, பிற நாடுகளுக்குச் சமமாக வளர முடியாது.' இவ்வெழுச்சிமிகு மகாநாட்டில் ஆறு ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கூடினார்கள். கூடினார்கள். அவர்களில் பாதிப் பேர்கள் சாதாரண பொதுமக்கள். சமத்துவ மனித வாழ்வை நாடி, நெடுந் தொலைவில் இருந்து வந்தவர்கள். அவர்கள் பிள்ளைகள் அக் காலகட்டத்தில், பள்ளிகளில் மழைக்கும் ஒதுங்காதவர்கள். அந்நிலையில், திருக்கோயிலூரிலும், கள்ளக்குறிச்சியிலும், பண் ருட்டியிலும், அருப்புக்கோட்டையிலும், பரமகுடியிலும், சிவ கெங்கையிலும் இருந்து குழுமக் காரணம் என்ன? 'தீண்டத் தகாதவராக', 'கீழ்சாதியாக' இருக்கும் இருக்கும் நிலைக்கு முடிவு காலத்தைக் காணப்போகிறோம் என்னும் நம்பிக்கையால் உந்தப் பட்டே, செங்கற்பட்டில் கூடினார்கள். முதல் சுயமரியாதை மாநாட்டில் ஏராளமான பெண்களும் கலந்துகொண்டது குறிப் பிடத்தக்கதாகும். அம் மாநாட்டிற்கு உணவு சமைத்தவர்கள் யார்? விருதுநகர் நாடார் சமையற்காரர்களே. அச்சாப்பாட்டை எல்லோரோடும் சேர்ந்து உண்ண உடன்படுவோரே மாநாட்டுப் பிரதிநிதிகளாக வரலாம் என்று முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது. அப்படியே நடந்தது. இத்தகைய புரட்சியை, அதுவரை, தமிழ்நாட்டின் பொது இயக்கங்களில், கண்டதில்லை. எவர் சமைத்தாலும் எவர் பரிமாறினாலும் எல்லோரும் சேர்ந்து உண்பதை தன்மான இயக்கமே முதன் முதல் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தியது. செங்கற்பட்டு முதல் தன்மான இயக்க மாநாட்டில், எல்லா சாதியா ரோடும் சேர்ந்து உண்டவர்களில் நானும் ஒருவன் என்பதை நினைக்குந்தோறும், 'அப்ப நான் மனிதனாகிப்போனேன்' என்று பாடத் தோன்றுகிறது. 'மக்கள் பிறவியினால் உயர்வு தாழ்வு உண்டென்ற கொள் கையை இம் மாநாடு அடியோடு மறுப்பதுடன் அதை ஆதரிக்கும் மதம், வேதம், சாஸ்திரம், புராணங்களையெல்லாம் பொதுமக்கள் பின்பற்றக்கூடாதென்றும், கட்டுப்பாட்டையும் 'வருணாசிரமமென்ற கொடுமையான சமுதாய முறையில் காணப்படும் பிராமணர், சத்திரியர், சூத்திரர், பஞ்சமர் முதலிய ஆட்சேபகரமான பிரிவுகளையும் ஏற்றுக் கொள்ளக்கூடாதென்றும் "மனித நாகரீகத்திற்கும் தேச முன் னேற்றத்திற்கும் தடையான தீண்டாமை" என்பதை ஒழித்து, எல்லாப் பொது வழிகள், குளங்கள், கிணறுகள், பாடசாலைகள்,
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/58
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை