பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன்மான இயக்கப் பணி 47 சத்திரங்கள், தண்ணீர்ப் பந்தல்கள் முதலிய பொது ஸ்தாபனங் களைத் தட்டு தடங்கலின்றி அனுபவிக்க சகல மக்களுக்கும் சம உரிமை கொடுக்கவேண்டுமென்று அம் மாநாடு முடிவுசெய்தது. சாதி அல்லது சமயப் பிரிவுகளைக் காட்டும் குறிகளை யாரும் அணிந்துகொள்ளக் கூடாதென்று கேட்டுக்கொள்வதாகவும் முடிவு செய்தது. கடவுள் பற்றி என்ன முடிவு செய்தது என்று அறியத் துடிப் பீர்கள். இதோ: 'கடவுள் பேரால், கோயில்களிலாவது அல்லது வேறு இடங்களிலாவது ஒரு பைசாவாவது ஒரு பைசா பெறும்படியான பொருளாவது செலவழிக்கக் கூடாதென்றும், 'வணங்குகிறவனுக்கும் வணங்கப்படுபவனுக்கும் மத்தியில் தரக னாவது வடமொழியாவது இருக்கக்கூடாதென்றும்' இம் மாநாடு கருதியது. 'இனிமேல் புதிதாய்க் கோயில்கள் கட்டக் கூடாதென்றும் இப் போதிருக்கிற கோயில், மடம், சத்திரம், வேத பாடசாலை முதலியவைக்காக விட்டிருக்கும் சொத்துகளை, கைத்தொழில், வணிகம், ஆராய்ச்சி முதலிய கல்விகளுக்காகவும் கைத்தொழில் களுக்காகவும் செலவழிக்க முயற்சி செய்ய வேண்டுமாய் பொது மக்களை இம் மாநாடு கேட்டுக்கொள்ளுகிறது' என்பது மற்றொரு முடிவு. அடுத்த ஆண்டு 10-5-30ஆம் தேதி ஈரோட்டில் அறிஞர் எம்.ஆர்.ஜெயகர் என்பவர் தலைமையில் நடைபெற்ற இரண்டா வது சுயமரியாதை மாநாட்டில் 'வணங்குவோருக்கும் வணங்கப்படுவதற்கும் நடுவில் தரக ரையோ, பூசாரியையோ ஏற்படுத்துவது தன்மானத்திற்கு விரோதமென்றும் தெய்வ வணக்கத்திற்குப் பணச் செலவு தேவை யற்றதென்றும் இம் மாநாடு கருதுகிறது. பூசாரிகளுக்கு தற்காலம் விடப்பட்டிருக்கும் மானியங்களை ரத்து செய்யவேண்டுமென்றும் இம் மாநாடு முடிவு செய்கிறது' என்பவை கடவுள் வழிபாடுபற்றிய முடிவுகளாகும். இரண்டாவது சுயமரியாதை மாநாடுவரை, கடவுள் மறுப்பு முன்னே நிற்கவில்லை. சமத்துவப் போரில், தடை கற்களாக, கடவுள் நம்பிக்கை, கடவுள் கட்டளை, நால் வருணம், சாத்திரம், இதிகாசங்கள், புராணங்கள், ஆகியவற்றை இணைத்து நிறுத்தி வைக்கும் முயற்சி யில் பழமை விரும்பிகளும் உயர் சாதியார்களும் முனைந்தார்கள்.