48 புரட்சியாளர் பெரியார் எனவே, கடவுள் உண்டா இல்லையா? மக்களில் பலரைத் தாழ்ந்தவர்களாகவும் சிலரை மட்டும் உயர்ந்தவர்களாகவும் படைக்கும் கடவுள் எப்படி வேண்டுதல் வேண்டாமை இலானாக இருக்கமுடியும்? என்று கேட்க முனைந்தார்கள். இதுபற்றி பெரியார் கூறியதைக் கவனிப்போம்: 'கழுதையில், நாயில், குரங்கில், எருமையில், பறக் கழுதை, பற நாய், பறக் குரங்கு, பற எருமை என்றும்; பார்ப்பாரக் கழுதை, பார்ப்பார நாய், பார்ப்பாரக் குரங்கு, பார்ப்பார எருமை என்றும் இருக் கிறதா? மனிதனில் மாத்திரம் இப்படி இருப்பதற்குக் காரணம் மதமல்லாமல் வேறு என்ன? இந்து மதம் ஏற்பட்டு எத்தனை காலம் ஆயிற்று? இதுவரை மனித சமூகத்தில் ஏற்பட்ட முன்னேற்றம் என்ன? கடவுள் அவதாரமான ராமனது ராஜ்யம் என்னும் காலத்தில் இருந்த கீழ் ஜாதியும், சத்தியகீர்த்தி அரிச் சந்திரன் ராஜ்யம் என்னும் காலத்தில் இருந்து வந்த சுடுகாட்டுப் பறையனும், பெண் ஜாதி விற்பனையும் பதினாயிரக்கணக்கான வருடங்கள் ஆகியும் இன்னமும் ஒழியவில்லை என்றால், மதத் தினால் மக்கள் முன்னேறுகிறார்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்? மதம் 'மதம் மனிதனுக்கு எவ்வளவு முட்டாள் தனத்தைக் கற்பிக்கிறது பாருங்கள்! செத்துப் பொசுக்கப்பட்டு அந்தச் சாம்பலைத் தண்ணீரில் கரைத்து விடப்பட்ட மனிதனுக்குப் பசி தீரவும் அகமகிழவும் அரிசி, பருப்பு, காய்கறி, செருப்பு பார்ப்பான்மூலம் பரலோகத்துக்கு அனுப்பிக் கொடுப்பதென்றால் மனிதனுக்குச் சிறிதாவது பகுத்தறிவு இருக்கிறதென்பதை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா? மதிக்கவேண்டாம் பெற்றோர்களை-இறந்துபோனவர்களை என்று நான் சொல்ல வரவில்லை. அதற்காகப் பார்ப்பானுக்கு ஏன் அழவேண்டும்? அவன் காலில் ஏன் விழவேண்டும்? இது மதக் கட்டளை, மதத் தத்துவம் என்றால், இப்படிப்பட்ட மதம் ஒழிய வேண்டாமா? என்று கேட்கிறேன். கல்யாணம், கருமாதி கல்லெடுப்பு, முதலிய சடங்குகள் பார்ப் பானுக்கு அழவே கற்பிக்கப்பட்டிருக்கின்றனவே ஒழிய, அவற்றி னால் வேறு பலன் என்ன இருக்கிறது?' இதுபோன்ற ஆய்வுகளில் பெரியாரின் தன்மான இயக்கம் தள்ளப்பட்டது. டார்வினுடைய கூர்தல் அறம், இங்கர்சாலின் நாத்திகவாதம், பெட்ரண்ட் ரஸலின் 'நான் ஏன் கிறுத்தவனல்ல',
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/60
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை