பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன்மான இயக்கப் பணி 49 வால்டேர், ரூசோவின் கருத்துக்கள், ஆகியவை துணைக்கு வந்தன. இயற்கையான பகுத்தறிவை, அச்சமின்றி பயன்படுத்திய தன்மான இயக்கத்தவர்கள், 1931 ஆகஸ்டில் நடைபெற்ற விருதுநகர் சுயமரியாதை மாநாட்டில், 'மனிதத் தன்மையைத் தடைப்படுத்துவதற்கு மதங்களின் பேரால் ஏற்பட்டுள்ள பழக்கவழக்கங்களே காரணமாயிருப்பதால், அப்படிப்பட்ட எல்லா மதங்களும் மறைந்து போகவேண்டு மென்றும் மதங்கள் ஒழியும்வரை மனிதர்களுக்குள் சகோதரத் துவம் வளராதென்றும் இம் மாநாடு கருதுகிறது' என்று முதல் முடிவாகவே நிறைவேற்றியது. 'இந்திய நாட்டில் தோன்றியுள்ள மத வேற்றுமைகளும் பகை களும் அழிய வேண்டுமானால் அறிவுள்ள இந்தியர்கள் முதலில் மத உணர்ச்சியை புறக்கணிக்க வேண்டுமென்று முடிவு செய்கிறது.' இது இரண்டாவது முடிவு. 1931 முதல் தன்மான இயக்கம், மத மறுப்பு, கடவுள் மறுப்பு இயக்கமாகவே இயங்கி வருகிறது என்றால் மிகையாகாது. தீண்டாமை ஒழிப்பு செங்கற்பட்டு மாநாட்டில் தீண்டாமை ஒழிப்பு முடிவு எடுத்தது போன்றே, ஈரோட்டிலும், 'தீண்டாமை என்னும் கொடுமை, மனித தர்மத்திற்கு விரோத மென்று இம் மாநாடு கருதுவதுடன், மக்கள் சமூகத்தில் எந்த வகுப்பாருக்கும் பொது உரிமைகளை மறுக்கும் பழக்கவழக்கங் களை உடனே ஒழிக்கவேண்டுமென்றும் பொது வழிகள், குளங்கள், கிணறுகள், தண்ணீர்ப் பந்தல்கள், கோயில்கள், சத்திரங்கள். முதலிய இடங்களில் சகலருக்கும் சம உரிமை வழங்க வேண்டு மென்றும் இம் மாநாடு முடிவு செய்கிறது' என்பதை ஒருமனதாக ஏற்றுக்கொண்டோம். அடுத்தாண்டு விருதுநகரில், 'தீண்டாமை என்பது இந்து சமூகத்திலுள்ள எல்லா சாதிகளையும் பிடித்த நோயென்றும், தீண்டாமை ஒழியவேண்டுமானால் பிராமணீயம் ஒழியவேண்டு மென்றும் மாநாடு முடிவு செய்தது. பொது வாழ்க்கை தொடக்க காலம் முதல், தந்தை பெரியார் ஆண் பெண் சமத்துவத்தில் நம்பிக்கையுடையவர். பொது வாழ்க்கையில், தன் மனைவியும் தங்கையும் உரிய பங்கு கொள்ளச் செய்தவர். பெண்கள் உரிமைக்காக வாழ்நாள் முழு வதும் போராடியவர். 4