4 50 புரட்சியாளர் பெரியார் எக் காரணத்தை முன்னிட்டும் திருமணத்தை ஒரு நாளைக்கு மேலாவது ஒரு விருந்துக்கு மேலாவது நடத்தக்கூடாதென்றும், முதல் சுயமரியாதை மாநாட்டின் வழிகாட்டலை இரண்டாவது சுயமரியாதை மாநாடு ஒரு முடிவாக நினைவுபடுத்தியது. கலப்புத் திருமணம் கலப்புத் திருமணம், புரோகிதமொழிந்த சிக்கனத் திருமணம் இவற்றை ஆதரிப்பதை முன்னுரிமை திட்டங்களாகவே தன்மான இயக்கம் கருதி வருகிறது. செங்கற்பட்டு சுயமரியாதை மாநாட்டின் முடிவுப்படி தமிழ் நாட்டில், இவ்வியக்க சார்பில், கலப்புத் திருமணங்கள் பல நடந்தன; நடக்கின்றன. இயக்கத்தின் முதல் கலப்புத் திருமணம் சு.குருசாமி, சு. குஞ்சிதம் ஆகியோரின் கலப்புத் திருமணமாகும். அதையடுத்து சிவகாமி சிதம்பரனார், அன்னபூரணி ரத்தின சபாபதி, மரகதவல்லி முருகப்பா, மஞ்சுளாபாய் வை.சு. சண்முகம், நீலாவதி இராமசுப்ரமணியம், சுந்தரி அழகப்பா என பலர் கலப்புத் திருமணங்கள் செய்துகொண்டதோடு, பல்லாண்டு காலம் தன்மான இயக்கத்தின் உயிர் நாடிகளாக இயங்கி வந்தார்கள். அத் திருமணங்கள் அனைத்தும் புரோகிதமற்ற வாழ்க்கை ஒப்பந்தங்களாக இருந்தன. 1928இல் பெரியாரின் 'குடி அரசில்' சேர்ந்த குத்தூசி குருசாமி சிந்தனை, சொல், செயல் அனைத்திலும் பெரியாரின் அச்சாகவே வாழ்ந்தார். ஈராண்டு காலம்போல, பெரியார் நடத்திய 'ரிவோல்ட்' என்ற ஆங்கில வார இதழுக்கு முதுகெலும்பாக இருந்தார். இது தன்மான இயக்கத்தைப் பரப்பியது. பெரியாரின் விடுதலை' நாளிதழில் குத்தூசி என்ற புனைப் பெயரில் 'பல சரக்கு மூட்டை'யென்ற தலைப்பில், தோழர் குருசாமி, பல்லாண்டு, நாள் தவறாமல் எழுதியக் கட்டுரைகள் அக் கால சமுதாயத்தை, ஆட்சியை உலுக்கின. பெரியாரின் அணுக்கத் தொண்டராக, தோழராக, தளபதியாக குத்தூசியார் இருந்த அளவு, எவரும் அந்நாள்வரை இல்லையென்பதை நான் நேரில் அறிவேன். கடவுள் மறுப்பு ஈரோட்டில் 12-5-1930இல் நடந்த சுயமரியாதை இளைஞர் மாநாட்டில் எந்தப் பொதுக் கூட்டங்களிலும் தொடக்கத்தி லாவது, முடிவிலாவது ராஜ வணக்கம், கடவுள் வணக்கம், தலைவர்கள் வணக்கம் ஆகியவைகள் செய்யும் செயலை விட்டுவிட
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/62
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை