தன்மான இயக்கப் பணி 51 வேண்டுமென்று' ஒரு முடிவு எடுத்தார்கள். அதன்படியே இயக்கம் நடந்து வருகிறது. தன்மான இயக்கக் கூட்டங்களில், நெடுங் காலம், தொடக்கத்திலோ, இறுதியிலோ, எவ்வித வணக்கப் பாட்டும் தலை காட்டியதில்லை. முப்பத்தேழு ஆண்டுகளுக்குப் பிறகு கடவுள் மறுப்பு ஒலியோடு இயக்கக் கூட்டங்கள் தொடங்கும் நிலை உருவாயிற்று. விடய புரத்தில் 1967இல் நடந்த இளைஞர் பகுத்தறிவுப் பயிற்சிப் பாசறையில், 'கடவுள் இல்லை; கடவுள் இல்லை; கடவுள் இல்லவே இல்லை', போன்ற கடவுள் மறுப்பு வாசகங்களை எல்லாக் கழகக் கூட்டங்களிலும் தொடக்கத்தில் முழங்க வேண்டுமென, பெரியார் அறிவித்தார். அப்படித் தொடங்கவேண்டுமென்று 14-6-1967இல் அவர் ஆணையிட்டார். அது முதல் கழகக் கூட்டங்களில், முதல் நிகழ்ச்சியாக கடவுள் மறுப்பு முழக்கம் இடம் பெறுகிறது. இன்றைக்கு எவ்வளவு முட்டாள்கள் கோயில் கட்டுகிறான். கதா காலட்சேபம் செய்கின்றான். திருவிழா கொண்டாடு கின்றான். இவைகளெல்லாம் எதற்காக? நம் மடமையையும் இழிவையும் நிலை நிறுத்துவதற்காகத்தானே. நமது பிரச்சாரம் அதிகமாக அதிகமாக இப்போது கச்சேரிகளிலெல்லாம் கோயில் கட்டுகிறான். திருச்சியிலுள்ள கெலெக்டர் அலுவலகத்தின் மரத்தி லிருந்த ஒரு குரங்கு அக் கிளை ஒடிந்து கீழே விழுந்ததில் சிக்கி செத்துவிட்டது. அதற்காக அந்த கலெக்டர் கோயில் கட்ட முற் பட்டான். நாங்கள்தான் கோர்ட்டில் “ஸ்டே” கேட்டோம். "ஸ்டே" வருவதற்குள் கோயிலை கட்டி முடித்துவிட்டார்கள். சிலை மட்டும் வைக்கவில்லை. மேடை மட்டும் கட்டி வைத்திருக் கிறார்கள். இன்றைக்கும் அதற்கு பூசை நடந்துகொண்டிருக் கிறது. வேலூரிலிருக்கிற கோட்டையிலுள்ள கோயிலுக்குள் சிலை வைக்கவேண்டுமென்று இதற்கு முன்னிருந்த அரசாங்கம் முற் பட்டது. அதை நாம்தான் தடுத்து நிறுத்தினோம். இப்போது எவனோ ஒருவன் புதிதாக கோயிலே கட்டப்போகிறானாம். இப்படி ஒவ்வொரு ஊரிலும் புது புது கோயில் கட்டுகிறான். அதற்கு அவ்வூரிலிருக்கிற கலெக்டர் ஆதரவாக இருக்கிறார். பணம் வசூல் செய்கிறார்-இதை அரசாங்கத்தால் தடுக்கமுடிய வில்லை. று அதற்கு மாறாக நாம் வீதிகள்தோறும் இதுபோன்று சிலை வைக்காவிட்டாலும் மண்ணில் சிமெண்டில் செய்து சிறு பொம்மைகளையாவது வைத்து அதனடியில் "கடவுள் இல்லை; கடவுள் இல்லவே இல்லை; கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்; கடவுளை பரப்பியவன் அயோக்கியன்; கடவுளை வணங்குகிறவன்
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/63
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை