பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 புரட்சியாளர் பெரியார் று காட்டுமிராண்டி; கோயிலுக்கு போகிறவன் மடையன்" என்று எழுதவேண்டும். இது தவறோ குற்றமோ இல்லை. இது அவன் மனதைப் புண்படுத்துகிறதென்றால் நம்மைப் பற்றி, கடவுளை நம்பா தவனைப் பற்றி தேவாரம், நாலாயிர பிரபந்தம் முதலிய நூல்களிலெல்லாம் மிகக் கேவலமாக இழிவாக பாடியிருக்கிறான். கடவுளை நம்பாதவனை கொலை செய்யவேண்டும், கழுவேற்ற வேண்டும், அவனது மனைவியின் கற்பை சூறையாடவேண்டும், அவன் வீடுகளுக்கு தீயிடவேண்டும் என்றெல்லாம் எழுதியிருக் கின்றான். இதெல்லாம் நமது மனதைப் புண்படுத்தாதா என்று கேட்கின்றேன். 'வேதத்தில் சாஸ்திரத்தில் நம்மையெல்லாம் சூத்திரன் என்றும் நமது பெண்களை சூத்திரச்சி என்றும் குறிப்பிட்டிருக்கிறான். சூத்திரன் என்றால் பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகன் என்று பொருள். சூத்திரச்சி என்றால் பார்ப்பானுக்கு வைப்பாட்டி என்று பொருள். நமது இயக்கம் தோன்றுகிற வரை இது நடப்பிலும் இருந்ததே! இன்றைக்கும் சாஸ்திரத்தில் மட்டுமில்லாமல் இந்து "லா'ப்படி நாமெல்லாம் சூத்திரர்கள்தானே. நமக்கு மான ரோச மிருந்தால் பொறுத்துக்கொண்டிருப்போமா? தீயிட்டல்லவா கொளுத்தி இருக்கவேண்டும். 'நம் நாட்டிலிருக்கிற பத்திரிகைக்காரனெல்லாம் அயோக்கிய னாதலால் இவற்றையெல்லாம் வெளியிடாமல் பொய்யை யெல்லாம் எழுதுகிறான். நாம் நம்பாவிட்டாலும் மற்ற நாட்டுக் காரன் நம்பட்டும் என்று எழுதுகிறான். அவனுடைய எண்ண மெல்லாம் மக்களை மடையர்களாக்க வேண்டும். மக்கள் அறிவு பெறாமல் தடுக்கவேண்டுமென்பதேயாகும்.' கடவுள் மறுப்புபற்றி கண்டோம். சிலை எடுப்பு பெரியாரின் கருத்துக்களை மேலேக் இவற்றை முறியடிக்க நமது மக்களுக்கு அறிவுவர நமது மக்கள் அவரவர்களால் கூடுமானவரை சிலைகள் வைக்கவேண்டும். முடியாவிட்டால் 'கல்லில் கடவுள் இல்லை, கடவுளைக் கற்பித் தவன் முட்டாள், கடவுளை பரப்பினவன் அயோக்கியன், கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி, கோயிலுக்குப் போகிறவன் மடையன் என்று செதுக்கி ஆங்காங்கு வைக்க வேண்டும். இது எப்போதும் அழியாமலிருக்கும். நமக்கு பின் சந்ததியினர் இதனைப் பார்த்து அறிவு பெறவேண்டும். இந்த சிலைக்கு பத்து, இருபது ஆயிரத்திற்கு மேல் செலவிட்டிருப் பார்கள். இவ்வளவு பணம் செலவானது வேதனையாக இருக் கிறது. நண்பர் ஜி.டி. நாயுடு அவர்கள் சொன்னது போல