பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன்மான இயக்கப் பணி தாழ்த்தப்பட்டோர் என்று 57 அழைக்கப்படுவோர், பீகார் மாநிலத்தில் 'பெல்சி' போன்ற இடங்களில் கொடுமைகளுக்கு ஆளாகும்போதும் சரி, விழுப்புரம், கூடலூர், ஆகிய ஊர்களில் கொல்லப்படும்போதும் சரி, ஒதுக்குத் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர்களும் கொதிப்பை அடக்கிக்கொண்டு, பொறுமையை மேற்கொள்ளும் நெருக்கடியில் சிக்கிக் கிடக்கிறார்கள். 'நாங்கள் கண்டிப்பதுபோல் கண்டிக்கிறோம்; நீங்கள் வருந்துவது போல் காட்டுங்கள்' என்று பேசி உடன்படிக்கை செய்துகொண்டது போல், பயன் விளையாத பேச்சோடு நிற்பது பரிதாபம். மற்ற சிறுபான்மையோரைப்போல், இவர்களால், நெருக்கடியை உருவாக்க முடிவதில்லை. எனவே, எனவே, தன்மான இயக்கம் தான் தாழ்த்தப்பட்டவர்களுக்காக தொடர்ந்து போராட வேண்டும். சாதி ஒழிப்பு பணியும், சமபந்தி உணவு முறையும் பழைய சூட்டோடு, முனைப்போடு, விழிப்போடு, தொடருதல் தேவைப் படுகிறது. கலையில் தீண்டாமை தீண்டாமையின் தீக்கரம் அருங்கலைகளையும் சுட்டெரிக்கத் தயங்கவில்லை என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு இதோ: நாயனக் கலை நுட்பமான கலை; தமிழர்களுக்கே உரிய தனிக் கலை. இதைக் கற்க, நீண்ட, கடுமையான பயிற்சி தேவை. இக் கலையில் தேர்ச்சிபெற்று, பெரிய இடங்களில், நாயனக் கச்சேரி நடத்தும் நிலைக்கு உயர, அரும்பாடு தேவை. அத்தனை பாடு பட்டு, கடுமையான பயிற்சிபெற்று, சிறந்து விளங்கிய, நாதசுர கலைஞர்கள் சிலர் ஒவ்வொரு தலைமுறையிலும் ஒளிவிட்டார்கள். இருபதாம் நூற்றாண்டின் இருபதுகளில் மதுரை சிவக்கொழுந்து என்னும் கலைஞர் புகழ்பெற்று விளங்கினார். எனவே, பெருஞ் செல்வர்களே, அவரை அழைக்கமுடியும். . 1924ஆம் ஆண்டு, கானாடு காத்தான் என்னும் ஊரில், ஒரு தன வணிகர் வீட்டில் திருமணம். திருமண ஊர்வலத்தில், சிவக் கொழுந்து வாசித்துக்கொண்டு வந்தார். மக்கள், இசையின் நயத் தில் மயங்கியிருந்தார்கள். சிவக்கொழுந்து இடுப்பில் விலை உயர்ந்த சரிகைக்கரை வேட்டி அணிந்திருந்தார். உடம்பில் சொக்காய் இல்லை. ஏன்? நாயனக் கலைஞர்கள், வாசிக்கும்போது, சொக்காய் அணியக்கூடாது என்பது மரபு. சிவக்கொழுந்துவின் தோளில் மட்டும், சிறிய துண்டொன்று இருந்தது.