பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 புரட்சியாளர் பெரியார் குறிப்பிட்ட அந்த நாள், பெரியார் ஈ. வே. ராமசாமி, டாக்டர் வரதராசுலு, திரு. வை.சு.சண்முகம், திரு. ஏ. வி. தியாகராசன் ஆகியோர், கானாடு காத்தானில் திரு. வை. சு.சண்முகம் வீட்டில் கூடியிருந்தார்கள். எதற்காக? முன்னர் குறிப்பிட்ட சேரன் மகாதேவி குருகுல போராட்டத் திட்டமிட. ஈ.வே. ராமசாமியோடு, அஞ்சா நெஞ்சன், தன்மான இயக் கத்தின் பெருந்தூண், சொல்லின் செல்வர், பட்டுக்கோட்டை அழகிரிசாமி சென்றிருந்தார். பொதுவாக, தஞ்சை மாவட்டத்தா ருக்கு இசைப்பித்து அதிகம். அழகிரிசாமியோ, நல்ல நாயனக் கச்சேரி கேட்க நெடுந்தூரம் போகக்கூடியவர். கானாடு காத்தா னில் நடந்துகொண்டிருந்த, சிவக்கொழுந்துவின் நாயன இசைப் பொழிவைக் கேட்கச் சென்றார். சில மணித் துளிகள் சென்றன. வாலிபர் ஒருவர், சிவக்கொழுந்துவை அணுகினார். தோளின் மேல் போட்டுள்ள சிறு துண்டை எடுத்து இடுப்பில் சொருகிக் கொள்ளச் சொன்னார். 'போட்டிருப்பதோ சிறு துண்டு. வாசிப்பு, வியர்வையைத் தள்ளும். அதைத் துடைக்க, தோளில் கிடப்பதே வசதி. மேல் துணியையல்ல; துண்டையே போட்டுள் ளேன்' என்று கூறி அமைதிப்படுத்த முயன்றார், சிவக்கொழுந்து. 'பெரிய சாதி' என்னும் நினைப்போடு நாலு காசும் சேர்ந்தால், அட்டகாசம் இயற்கை. வாலிபர் ஒப்பவில்லை. துண்டைத் தோளில் போட்டபடி வாசிக்கவிடமாட்டேன் என்று மிரட்டினார். கேட் இதைப் பார்த்துக்கொண்டிருந்த அழகிரிசாமி, சிவக்கொழுந்து விடம் போனார். உரத்த குரலில், 'துண்டை எடுக்கவேண்டாம்; இடுப்பில் கட்டவேண்டாம்; இப்படியே வாசியுங்கள். கிறவர்கள் கேட்கட்டும்; விரும்பா தவர்கள் போகட்டும்' என்று ஆணையிட்டார். பெரியாரின் ஆண்மையல்லவா முழங்கிற்று? எதிர்ப்புத் தெரிவித்த வாலிபரோடு, மேலும் சிலர் சேர்ந்து கொண்டு மிரட்டினார்கள். திருமண ஊர்வலம் நடுத்தெருவில் நின்றது. இதற்குள், அழகிரிசாமி, யார் என்பதை அடையாளம் கண்டு கொண்டார்கள். அவருடைய குருநாதர் ஈ. வே. ராமசாமி, வை.சு.சண்முகம் வீட்டில் தங்கியிருப்பது தெரிந்துவிட்டது. தூது பறந்தது. மானுடத்தின் பேருருவை, சமத்துவத்தின் மேருவை, ஈ. வே. ராமசாமியைக் கண்டு முறையிட்டார் தூதுவர். செய்தி யைக் கேட்பதில் பொறுமையைக் காட்டினார் பெரியார். பதிலில் சமத்துவப் பெருந் தீச்சுடர் விட்டது. இதோ அந்த பதில்: உங்களுக்கிருக்கின்ற பணக்கொழுப்பை காட்டுவதுதானே. இம் மாதிரியான அவமரியாதை எல்லாம்; ஆனதினால்தான் நாங்கள்