பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 புரட்சியாளர் பெரியார் செங்கற்பட்டில் நடந்த பார்ப்பனரல்லாத இளைஞர் மாநாடு, 'தீண்டாதார் எனப்படுவோருக்கு சர்க்காரில் காலியாகும் உத்தி யோகங்களில் முதல் உரிமை கொடுக்கவேண்டுமென்று' முடிவு செய்தது. ஈ.வே. ராமசாமி, உத்தியோகங்களில் மட்டுமா வகுப்புரிமை கோரினார்? இல்லை; தேர்ந்தெடுக்கப்படும் பதவிகளிலும் வகுப் புரிமைக்குப் பாடுபட்டார். தாழ்த்தப்பட்டோர்க்குத் தனித் தொகுதி கோரினார்; அதற்காக ஆதரவு திரட்டினார். தாழ்த்தப் பட்டவர்களுக்கு தனித் தொகுதி வேண்டுமென்ற ஆலோசனையை டாக்டர் அம்பேத்கார் வட்ட மேசை மாநாட்டில் வற்புறுத்தினார். தொடர்ந்து ஆதரவு திரட்டினார். ஆங்கிலேயே அரசு, அதை ஏற்றுக்கொள்ள சித்தமாக இருந்தது. ஆனால் காந்தியடிகள் தனித் தொகுதி முறையை எதிர்த்து உண்ணா நோன்பிருந்தார். சாகும்வரை உண்ணா நோன்பென்று தொடர்ந்தார். பொது வாழ்க்கையில் முன்னணியில் இருந்த பலர், டாக்டர் அம்பேத் காரை, நெருக்கினார்கள், கெஞ்சினார்கள். கடைசியில் ஓர் உடன் படிக்கை ஏற்பட்டது. அதற்குப் பூதனா ஒப்பந்தம் என்று பெயர். அதன்படி, தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனித் தொகுதி கிடை பொதுத் ஆனால் அவர்களுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படும். எத்தனை என்பதை, அந்தந்த மாநிலங் களில் தாழ்த்தப்பட்டவர்களின் எண்ணிக்கை விழுக்காட்டு அடிப் படையில் முடிவு செய்யப்படும். இதுவே உடன்படிக்கையின் யாது; சாரம். தொகுதியில் சில தனித் தொகுதி முறைக்கும் ஒதுக்குத் தொகுதி முறைக்கும் என்ன வேறுபாடு? தனித் தொகுதியென்றால், வேட்பாளர்கள், தாழ்த்தப்பட்டவர்களின் தயவை-வாக்குகளை-மட்டுமே நாட வேண்டும். மற்ற சாதியார் அத்தொகுதியில் வாக்களிக்க முடி யாது. அப்படியிருந்தால், தாழ்த்தப்பட்டவர்களுக்கு இழைக்கும் கொடுமைகளை சில பிரதிநிதிகளாவது, துணிந்து எதிர்க்கமுடியும். போதிய சூட்டோடு எதிர்க்க இயலும். பொதுத் தொகுதியில் ஒதுக்குத் தொகுதி என்றால் வேட்பாளர்கள் ஆதி திராவிடர்க ளாக இருப்பார்கள். மற்ற சாதிக்காரர்களின் வாக்குகளை நிறையப் பெற்றால்தான் வெற்றிபெற முடியும். எனவே, தங்கள் மக்க ளுடைய நலனுக்குப் போராடுவதற்குத் துடிக்கமாட்டார்கள் என்பது பட்டறிவு தெளிவுபடுத்திய பாடம். சமுதாயத்தின் மொத்த நலனைக் கருதி, பிறப்பின் பேரால் கற்பிக்கப்படும் ஏற்றத் தாழ்வுகளை சட்டத்தின்மூலம் ஒழிக்கவேண்டும். அது வரையில் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனித் தொகுதி தேவை.