64 புரட்சியாளர் பெரியார் வகுப்பு பேதம் 'வகுப்பு பேதம் காண்பிக்கப்படுகிற எல்லா ஓட்டல்களையும் காப்பி கிளப்புகளையும் இந்த மாநாடு கண்டிப்பதுடன், இவ்வித விஷமத்தனமான பேதங்கள் உள்ள ஓட்டல்களுக்கும் காப்பி கிளப்புகளுக்கும் அவ்வவ்விடத்திலுள்ள அதிகாரிகள் லைசென்ஸ் கொடுக்கக்கூடாதென்றும் கேட்டுக்கொள்ளுகிறது. 'இரயில்வே அதிகாரிகள் தங்கள் வசத்திலும் மேற்பார்வை யிலும் உள்ள, சாப்பாட்டுச்சாலைகளிலும் சிற்றுண்டிச்சாலைகளி லும் சாதி, மதம், வகுப்பு, நிறம், முதலியவற்றைப் பொறுத்து எவ்வகையிலும் வேற்றுமையாகப் பயணிகளைப் பாராட்டாம லிருப்பதற்குரிய நடவடிக்கையை உடனே கைக்கொள்ளுமாறும் இவ்விழிவான வேற்றுமையை ஒழிக்க, இரயில்வே ஆலோசனைக் குழுக்களும் இந்திய சட்டசபை மெம்பர்களும் ஏற்பாடுகள் செய்யு மாறும் இம் மாநாடு கேட்டுக்கொள்ளுகிறது' என்றும் முடிவுகள் எடுக்கப்பட்டன. இரண்டாவது உலகப் போரின்போது, சர் ஆ. இராமசாமி முதலியார், இந்திய அமைச்சராக இருந்தபோது, பெரியார் முனைந்து நின்று, இரயில்வே ஒட்டல்களில் பிராமணாள் என்று பிரித்து வைப்பதை ஒழித்தார். இரயில் நிலையங்கள் அல்லாத இடங்களில் பார்ப்பனர்கள் நடத்தும் சிற்றுண்டிச்சாலைகளிலும் உணவுச்சாலைகளிலும் 'பிராமணாளுக்கு' என்று இடம் ஒதுக்குவது பல்லாண்டுகளாக வந்த பழக்கம். அதோடு, அந்தக் கடைக்கு வெளியே 'பிராமணாள் ஓட்டல்' என்று பெயர்ப் பலகையில் எழுதிவைப்பதும் பழைய பழக்கம். இது பொதுமக்களைப் பிரித்துக்காட்டி இழிவுபடுத்துவ தாகும். இம்முறையைப்பற்றிக் குறிப்பிடும்போது, ஒருத்தி தன் தெருவில், தன் வீட்டில்: "இது பதிவிரதை வீடு' என்று போர்டு போட்டுக்கொண்டால் மற்றவர்கள் வீடு என்ன என்று அர்த்தம்?' என்று நெஞ்சில் தைக்கும்படி கேட்டார். உணவுச்சாலை அறிவிப்புகளில் 'பிராமணாள்' என்னும் சொல்லை நீக்கிவிட்டு, மரக்கறி உணவுச்சாலை என்று போடும்படி பெரியார் வேண்டுகோள் விடுத்தார். போதிய அவகாசம் கொடுத்து, அதற்குள் பொதுமக்கள் மனதை புண்படுத்தும் அச் சொல்லை நீக்கிவிடும்படி வேண்டிக்கொண்டார். பல இடங்களில் உரிமையாளர்கள் காலத்தின் போக்கையறிந்து ஒத்துழைத்தார்கள். 'பிராமணாள்' என்னும் சொல்லை நீக்கிவிட்டார்கள். ஆனால் சிலர் வீம்பு பண்ணினார்கள்; எடுக்க மறுத்தார்கள். எடுக்க
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/76
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை