பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன்மான இயக்கப் பணி 65 மறுத்த ஓட்டல்களில் ஒன்று சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள 'முரளீஸ் கபே' என்பதாகும். முரளீஸ் கபே ஓட்டலின்முன் நாள்தோறும் அமைதியான முறையில் மறியல் செய்யும் போராட்டத்தை பெரியார் அறிவித் தார். அப்படியே ஒன்பது திங்கள்போல் நடந்தது. ஒவ்வொரு நாளும் மறியல் தொண்டர்கள் கைதுசெய்யப்பட்டார்கள்; சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார்கள், கடைசியில் வெற்றி கிட்டியது. அறுநூறுக்கு மேற்பட்டவர்கள் சிறைப்பட்ட பிறகு, உரிமையாளர் அந்த ஓட்டல் பலகையில் 'பிராமணாள்' என்ற சொல்லை எடுத்து விட்டார். 10-5-30இல், ஈரோட்டில் கூடிய தீண்டாமை பற்றி செய்த முடிவு வருமாறு: இரண்டாவது மாநாடு தீண்டாமை என்னும் கொடுமை மனித தர்மத்திற்கு விரோத மென்று இம் மாநாடு கருதுவதுடன் மக்கள் சமூகத்தில் எந்த வகுப்பாருக்கும் பொது உரிமைகளை மறுக்கும் பழக்க வழக்கங் களை உடனே ஒழிக்கவேண்டும். பொது வழிகள், குளங்கள், கிணறுகள், தண்ணீர்ப் பந்தல்கள், கோவில்கள், சத்திரங்கள் முதலிய இடங்களில் சகலருக்கும் சம உரிமை வழங்க வேண்டு மென்று இம் மாநாடு முடிவுசெய்கிறது. அதோடு, பிறப்பின் பேரால் ஏற்பட்ட சமூகக் கொடுமைகளையும் வேற்று மைகளையும் அடியோடு ஒழிப்பதற்கு எடுத்துக்கொண்ட முயற்சிகள், பெரிதும் அவைகளை காப்பாற்ற ஏற்பட்டவர்களின் தீவிர முயற்சிகளால் வெற்றிபெறாத நிலையில் இருப்பதால் பொதுமக்கள் முன்னேற்றத்தைக் கருதி அவற்றை சட்டத்தின் மூலம் ஒழிக்கவேண்டுமென்று இம் மாநாடு கருதுகிறது என்று மற்றோர் முடிவினை ஏற்றுக்கொண்டது. நெடுங்காலமாக நடைமுறையில் உள்ள சாதி உயர்வு தாழ்வு முறையைத் தகர்த்தெறியப் பாடுபட்ட பெரியாரை, பார்ப்பன வெறுப்பாளர் என்று குற்றஞ் சாட்டினர். அதற்கு பெரியார் பதில் என்ன? இதோ அப் பதில்: 'கொசுவலை உபயோகிப்பதால் நாம் கொசுக்களுக்குத் துவேஷிக ளாகி விடுவோமா? மூட்டைப்பூச்சி கடிக்காமலிருப்பதற்கு நம் வீட்டை அடிக்கடி சுத்தஞ்செய்வதால், நாம் மூட்டைப்பூச்சி துரோகிகள் ஆகிவிடுவோமா? இப்படிப்பட்ட துவேஷத்திற்கும் துரோகத்திற்கும் நாம் ஆளாகக்கூடாது என்று பயந்து, பயந்து, பார்ப்பனர் தூஷணைகளுக்கு நடுங்கி, நடுங்கி, நம் குறைகளை வெளியில் எடுத்துச் சொல்வதற்கும் அவைகளை நிவர்த்திப்பதற் 5