பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 புரட்சியாளர் பெரியார் கும் இயலாத அவ்வளவு மோசமான பயங்காளிகளாக விட்டோம்.' 1928 நவம்பரில் சென்னையில், பெரியார் ஈ. வே. ராமசாமி தலைமையில் ஒரு சீர்திருத்த மாநாடு கூடிற்று. அம் மாநாட்டை செல்வி ஜோதிர்மாயி கங்குலி என்பவர் தொடங்கிவைத்தார். அந்த அம்மையார் அப்போது, பஞ்சாபில் இருந்த சாதி ஒழிப்பு மன்றத்தின் தலைவராக இருந்தார். இம் மாநாட்டில் சமபந்தி உணவுமுறை பின்பற்றப்பட்டது. இம் மாநாட்டிலும் சமபந்தி உணவிலும் நானும் பங்குகொள்ளும் வாய்ப்பு பெற்றேன். தலைவர் பெரியார், தமது முன்னுரையில் கூறியதாவது: 'ஒரு பெரிய கிணறு இருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். அந்தக் கிணற்றிற்கு மிகப் பழமையானதும் விசேஷமானதுமான ஒரு புராணம் இருப்பதாகவே வைத்துக்கொள்ளுங்கள். அதாவது, அந்தக் கிணற்றுத் தண்ணீரில் ஒரு துளி தண்ணீரைச் சாப்பிடுவ தனாலோ அல்லது மேலே தெளித்துக்கொள்வதனாலோ நம்முடைய எல்லாப் பாவமும் மகா பாதகமான காரியம் என்று சொல்லப்பட்ட செய்கைகளைச் செய்தாலும் மன்னிக்கப்படுவ துடன் மோட்சலோகம் என்பது கிடைக்கும் என்று எழுதியிருப்ப தாகவே வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் இப்போது அந்தக் கிணற்றுத் தண்ணீரில் ஒரு சிறிது சாப்பிட்டால் விஷபேதி காணக் கூடியதாகவும் ஸ்நானம் செய்தால் சரீரமெல்லாம் சொறிசிரங்கு வரக்கூடியதாகவும் இருந்தால், அதற்காக நாம் செய்யவேண்டிப வேலை என்ன? அந்தத் தண்ணீரில் விஷப்பூச்சிகள் உண்டாகித் தண்ணீரைக் கெடுத்துவிட்டது என்று கருதி, அந்த விஷப்பூச்சிகள் சாகத்தக்க மருந்தை அந்த கிணற்றுக்குள் போடுவோம். அப்படிப் போட்ட பிறகும் அந்தத் தண்ணீரின் குணம், அப்படியே முன்போலவே இருக்குமானால் மேற்கொண்டு என்ன செய்வோம்? மருந்துக்கும் கட்டுப்படாத அளவு கெடுதி, அந்தத் தண்ணீரில் உண்டாய்விட்டதாகக் கருதி, அந்தக் கிணற்றுத் தண்ணீர் முழுவதையும் இறைத்து, வெளியில் ஊற்றி, அந்தக் கிணற்றையும் நன்றாகக் கழுவி விடுவோம். அந்தப்படி செய்த பிறகும் மறுபடியும் அந்தத் தண்ணீரின் குணம் அப்படியே இருக்குமானால், அதன் காரணம் என்ன? அந்தக் கிணற்றுக்குத் தண்ணீர் வரும் ஊற்றே விஷத்தன்மை பொருந்தியது. அதாவது விஷநீர் ஊற்றுக் கிணறு என்றுதானே ஏற்படும்? அப்படிப்பட்ட விஷநீர் ஊற்றுக் கிணற்றை என்ன செய்வீர்கள்? பழைய புராணத்தையும் அதில் உள்ள அந்தக் கிணற்றுப் பெருமையையும் மதித்து, அதிலேயே குளித்து, அந்த நீரையே