நூன்முகம் vii வாழ மறுத்தவர். நம்மில் கோடானு கோடி மாந்தர் புனிதமாகக் கருதும் பலவற்றைச் சாடிச்சாடி வாழ்ந்தவர். அதனால் ஏற்பட்ட எரிச்சல் காரணமாக, 'பெரியார் நமக்காகவே வாழ்ந்தவர்' அவர் தன்னுடைய ஆதாயத்திற்காக எதையும் உடைக்காத, பொதுநலப் புரட்சியாளர்' என்பதை பலர் மறந்துவிட்டிருக்க லாம்; பல்லாயிரவர் பெரியாரின் பெருமையினையும் அருமையினை யும் இன்று முழுமையாக உணராமல் இருக்கலாம். இருப்பினும், மக்கள் இன நோய்களுக்கு மாமருந்துகளாக பெரியாரின் கருத்து களும் அறிவுரைகளும் பயன்படும் என்பது காலம் காட்டக் காத் திருக்கும் உண்மை ஆகும். 'தந்தை பெரியார், ஈ. வே. ராமசாமியைப் போன்ற ஒரு மாமனிதர், நம்மிடையே வாழ்ந்தார்;தொண்ணூற்று அய்ந்து வயது வரை வாழ்ந்தார்; கடைசி மூச்சுவரை, சூறாவளியெனச் சுற்றி வந்து, புரட்சிச் சிந்தனைகளை பேராறுகளாகப் பாய்ச்சி வந்தார்; வாழ்க்கையின் பல கூறுகளுக்கும் பாடம் சொல்லித் தந்த பேராசானாக விளங்கினார்' என்பதை இனி வரப்போகும் தலை முறைகள் நம்ப மறுத்தால், வியப்பில்லை. அத்தனைப் பெரிய சிந்தனையாளராகவும் சாதனையாளராகவும் இரண்டிற்கும் மேலான பண்பாளராகவும் வாழ்ந்த, பகுத்தறிவுப் பகலவன், தன்மான இயக்கத் தந்தை, சமத்துவச் சுடரொளி, பெரியார் ஈ.வே. ராமசாமியாரின் நூற்றாண்டு விழாவினை இப்போது கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். எந்த தலைவருக்கும் கிடைக் காத சிறப்பினை பெரியாருக்குச் செய்ய தமிழ்நாடு அரசு முன் வந்துள்ளது. ஓர் ஆண்டு முழுவதும் பெரியாருக்கு நூற்றாண்டு விழா எடுக்க முடிவு செய்து, ஒவ்வொரு திங்கள் ஒவ்வோர் மாவட்டத் தலைநகரில் சிறப்பாக விழா எடுக்கிறார்கள். அந்த வரலாற்றுச் சிறப்புடைய ஆண்டில் பெரியார் அறக்கட்டளைச் சொற்பொழிவின் முதல் தொடரினைத் தொடங்கி வைக்கும் பெரும் பேற்றினை, சென்னைப் பல்கலைக் கழகம், எனக்கு வழங்கி யுள்ளது. இச் சிறப்பினை நல்கிய என்னுடைய தாய்ப் பல்கலைக் கழகத்திற்கு என் உளமார்ந்த நன்றியினைப் படைக்கிறேன். 'ஆண்டுதோறும் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பெரியார் அறக்கட்டளை சொற்பொழிவுகள்' நிகழ்த்துவதற்கு மூலதன மாக, பத்தாயிரம் ரூபாய் கொடுப்பதென்று சுயமரியாதைப் பிரசார நிறுவனம் முடிவுசெய்தது. திராவிடக் கழகப் பொதுச் செயலாளரும், 'விடுதலை' நாளிதழின் ஆசிரியருமான, மதிப்பிற் குரிய தோழர் கி. வீரமணி அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/8
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை