பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 புரட்சியாளர் பெரியார் மென்பதோ, கற்பென்பதோ, ஆண் பெண் இருபாலாருக்கும் சொந்தமானதேயன்றி பெண்களுக்கு மட்டுமல்ல. இன்றைய சீர்கேடான நிலைக்குப் பெண்மக்கள் மிருகங்களிலும் கேவலமாகக் கருதப்பட்டதும் அவர்கள் பிள்ளைபெறும் இயந்திரங்களாக எண் ணப்பட்டதும் மனித ஜென்மத்திற்கும் பெண்களுக்கும் சம்பந்தமே இல்லை என ஆண்கள் மதித்து வந்ததும் இவைகளின் சௌகரியத்தி னால் இவன் ஒழுக்கம் என்பதை விட்டு விட்டு நாளாவட்டத்தில் வெகுதூரம் விலகி, அதற்கும் இவனுக்கும் சம்பந்தமில்லாது, இன்று வாழ்வதுமே காரணமாகும்' என்றுரைத்தார். 'பழக்கத்தால் மாடுகளும் செக்கைச் சுற்றும்' என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடினார். பழக்கம் மாடுகளை மட்டும் இயக்கவில்லை; மக்களினத்தையும் இயக்கிவருகிறது. எடுத்துக் காட்டிற்கு 'ஆத்மா' என்னும் சொல்லைப் பார்ப்போம். பழக்கத் தின் காரணமாக, 'ஆத்மா' என்னும் சொல்லை நாம் பயன் படுத்துகிறோம். ஆனால் அதைப்பற்றி கணமேனும் சிந்தித்துப் பார்த்ததில்லை. பெரியார், சிந்தித்தார்; முடிவுக்கு வந்தார்; அதை 9-9-1934ஆம் நாளைய 'பகுத்தறிவு' வார இதழின் தலையங்கத்தில் வெளியிடுகிறார். இதோ அக்கருத்து: 'ஆத்மா' என்பதை இதுவரை ஒரு மனிதனும் அர்த்தத்தோடு உறுதிப்படுத்தவேயில்லை. 4+3=10 என்று சொல்லிவிட்டு, அந்த 10அய்ப்பற்றியே விவகரித்துக்கொண்டிருப்பதுபோலவே, அதாவது 10அய், யார் யாருக்கு எப்படி பங்கிடுவது என்று வேண்டுமானால் பேசு; அதற்கு மேல், 4+3= எப்படி பத்து என்று மாத்திரம் கேட்கக்கூடாது என்கிற நிலையில்தான் ஆத்ம தத்துவம் இருக்கிறது.' இவ்வாதத் தின் அடிப்படையை மறுக்கமுடியுமா? மக்கள் வாழ்க்கையின் ஒரு துறைக்கோ, பல துறைகளுக்கோ, வழி காட்டும் சீரிய சிந்தனையாளர்களை பொதுமக்கள், 'மகானாக'

  • கண்கண்ட தெய்வமாக' ஆக்கி வணங்கத் தலைப்பட்டுவிடுவது

உண்டு. அவர்களைப் புதிய கடவுள்களாக்கி வழிபட முற்படுவதும் உண்டு. அறிவைப் பயன்படுத்தி, நல்லதை அறிந்து, நல்லதைச் சொல்லி, நல்லதைச் செய்து, வாழும்படி மக்களினத்திற்கு வழிகாட்டியவர் புத்தர் ஆவார். ஆனால், அவர் மறைந்தபின், அவரை அவதார மாக்கி, கோயில் கட்டி, வழிபட பலர் முனைந்துவிட்டார்கள். கடவுள் கவலை நமக்கு வேண்டாம்' என்று அறிவுறுத்திய புத்தரையே கடவுளாக்கி வழிபடுதல் எவ்வளவு முரண்பாடு. இத்தகைய வழிபாட்டு நிலை தனக்கு வந்துவிடக்கூடாது என்பது