70 புரட்சியாளர் பெரியார் சுயமரியாதையும் சுதந்திரமும் சுயமரியாதையும் சுதந்திரமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல என்பது பெரியார் முடிவு. சுயமரியாதை இயக்கத்தின் தத்துவம் என்ன? 'எந்தக் காரியமானாலும் காரண காரியமறிந்து செய்; சரியா, தப்பா என்பதை அந்தக் காரண காரிய அறிவிற்கும் ஆராய்ச்சிக்கும் விட்டுவிடு; எந்த நெருக்கடியிலும் அதன் முடிவுக்கு மரியாதை கொடு' என்பதாகும். மனிதன் சரியென்று கருதிய எண்ணங்களுக்கும் முடிவுகளுக்கும் மரியாதை கொடுப்பதுதான் சுதந்திரமாகும். ஆகவே, சுதந்திரத்திற்கும் சுயமரியாதைக்கும் அதிக தூரமில்லை என்று பெரியார் தெளிவுபடுத்தினார். . 'இன்றைய சுதந்திரவாதிகள் சுயமரியாதையை அலட்சியம் செய் கிறார்கள். இது உண்மையிலேயே மூடவாதம். ஏன்? சுயமரியாதை அற்றவர்களுக்குச் சுதந்திரம் பலனளிக்காது. காந்தியார், இந்துமதம் புனருத்தாரணம் ஆவதும் பழைய முறைகள் உயிர்ப்பிக்கப்படுவதும் சுதந்திரம் என்கிறார். 'பண்டித ஜவஹர்லால் நேரு, இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுபடுவது சுதந்திரம் என்கிறார். இவர்கள் இருவரும் கோரும் சுதந்திரங்களில் எது வந்தாலும் அல்லது இரண்டுமே வந்தாலும் மனித சமூக வாழ்க்கையில் உள்ள துன்பங்களில் எது ஒழிக்கப்பட்டு விடும் என்று ஆராய்ந்து பார்த்தால் சுதந்திரம், சுயமரியாதை அளிக்காது என்பது விளங்கும். எவ்வளவு சுதந்திரம் ஏற்பட் டாலும் சுயமரியாதைக்குத் தேவை இருந்துகொண்டுதான் இருக் கும்' என்பது பெரியாரின் முடிவு ஆகும். சுயமரியாதை என்பதற்கு நிகர் உலகில் மனி தனுக்கு உயிரைத் தவிர வேறு ஒன்றுமே இல்லையென்று சொல்லவேண்டும்' என்பது பெரியார் கருத்து. இது பொதுமக்கள் கருத்தாகவும் பரவிவிட்டால் குறைகள் பல தொலைந்துவிடும். சுயமரியாதைத் தத்துவம் என்ன என்பதை விளக்கிய பெரியார் சுயமரியாதை இயக்கத்தின் பணிகளை மதிப்பிட்டார். அம்மதிப் பீட்டை பெரியாரின் சொற்களிலேயே காண்போம்: . தமிழ்நாட்டில் சுயமரியாதை இயக்கம் தோன்றி வெகு சாதாரண முறையில், எவ்வளவோ எதிர்ப்புக்கிடையில், நேரப்போக்குப் பிரச்சாரமாக நடந்துவந்திருந்தபோதிலும் அதற்கு எத்தனையோ இடையூறுகள் பல கூட்டங்களிலிருந்து வந்தும், சுயமரியாதை இயக்கம், தமிழ்நாடு, மலையாளநாடு, ஆந்திரநாடு ஆகியவைகளை சமுதாய இயலில் இயலில் ஒரு கலக்குக் கலக்கிவிட்டிருக்கிறது. மத
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/82
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை