சமதர்மப் பணி 73 டிருக்கிற தன்மை இருக்கிறவரையிலும் சுயமரியாதை இயக்கம் இருந்தேதான் தீரும்' என்று தன்மான இயக்கத்தின் எதிர்காலப் பணியைக் கோடிட்டுக் காட்டினார். 'சமதர்ம இயக்கம், உலக மக்கள் எல்லோரையும் பொருத்த இயக்கம்: சாதி, மதம், வருணம், தேசம் என்கின்ற கற்பனை நிலைகளை எல்லாம் தாண்டிய இயக்கம். பிராமணன், சத்திரியன் சூத்திரன், அரிசனன் என்கிற வருணங்களை ஒழித்து எல்லோரும் எப்பொழுதும் மனிதரே என்று கூவும் இயக்கம். ஏழை என்றும் பணக்காரன் என்றும் முதலாளி என்றும் தொழிலாளி என்றும் எசமான் என்றும் கூலி என்றும் ஜமீந்தார் என்றும் குடியானவன் என்றும் - உள்ள சகல வகுப்புகளையும் வேறுபாடுகளையும் நிர்மூல மாக்கித் தரைமட்டமாக்கும் இயக்கம். மற்றும் குரு என்றும் சிஷ்யன் என்றும் பாதிரி என்றும் முல்லா என்றும், முன்ஜென்மம், பின்ஜென்மம், கர்மபலன் என்றும், அடிமையையும் எஜமானனையும் மேல்சாதிக்காரனையும் கீழ்சாதிக்காரனையும் முதலாளியையும் தொழிலாளியையும் ஏழையையும் பணக்காரனையும் குடிகளையும் மகாத்மாவையும் சாதாரண ஆத்மாவையும் அவனுடைய முன்ஜென்ம கர்மத்தின் படி அல்லது ஈஸ்வரன் தன் கடாட்சப்படி உண்டாக்கினான் என்று சொல்லப்படும் அயோக்கியத்தனமான, சுயநலங்கொண்ட, சோம் பேறிகளின் கற்பனைகளையெல்லாம் வெட்டித் தகர்த்துச் சாம்பலாக்கி, எல்லோருக்கும் எல்லாம் சமம், எல்லாம் பொது என்ற நிலைமையை உண்டாக்கும் இயக்கம். சாதி, சமய, தேசச் சண்டையற்று, உலக மக்கள் யாவரும் தோழர்கள் என்று சாந்தியும் ஒற்றுமையும் அளிக்கும் இயக்கம்; இன்று உலகமெங்கும் தோன்றித் தாண்டவமாடும் இயக்கம்' என்று முரசு கொட்டினார். தோற்றுவாய் பெரியார் சமதர்ம இயக்கத்தின் தோற்றுவாய்பற்றி கூறியதைக் கவனிப்போம். 'சமதர்ம உணர்ச்சி ஒரு எண்ணமாய் ஏற்பட்டு, அதன் தத்துவங் களைப்பற்றியும் கொள்கைகளைப்பற்றியும் வெளியில் எடுத்து மக்களுக்குத் தெரியும்படியாக மாநாடுகள் மூலமும் அறிக்கை மூலமும் வெளிப்பட்டிருப்பதாக நமக்கு விளங்கும்படியாகக் காணப் படும் காலமே, இன்றைக்கு சுமார் 80, 90 வருஷங்களுக்கு முன்பு என்று தெரிகிறது. அதாவது 1847ஆம் ஆண்டிலேயே இலண்டன் மாநகரத்தில் உலகத்திலுள்ள சமதர்மவாதிகளுடைய மாநாடு ஒன்று நடந்திருப்பதாகவும், அதன் பலனாய் அறிக்கை வெளியிட்
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/85
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை