74 புரட்சியாளர் பெரியார் டிருப்பதாகவும் தெரியவருகிறது. ஆனால் அதைச் சீக்கிரத்தில் கையாளப்படவும் அனுபவத்தில் கொண்டுவரவும் முயற்சித்த நாடு ரஷியாவாக ஏற்பட்டுவிட்டது. இது சிலருக்கு ஆச்சரியத் தைக் கொடுக்கக்கூடிய தாயிருந்தாலும் அந்தப்படி ஏற்படுவதற்கு நியாயம் இல்லாமல் இல்லை. 'எங்கு அளவுக்கு மீறிய தாங்கமுடியாத கொடுமை நடைபெறு கின்றதோ அங்குதான் சீக்கிரத்தில் பரிகார முயற்சி வீறுகொண் டெழவும் சீக்கிரத்தில் இரண்டிலொன்று காணவுமான காரியங்கள் நடைபெறும். இந்த நியாயப்படி பார்ப்போமேயானால் உலக அரசாங்கங்களில் எல்லாம், ரஷிய ஜார் அரசாங்கமே, மிகக் கொடுங்கோன்மையாக நடைபெற்று வந்திருக்கின்றது. அதனாலே அங்கு சமதர்ம முறை அனுபவத்திற்குக் கொண்டுவரவேண்டிய தாயிற்று.' சமதர்ம முறையின் தோற்றத்தைக்காட்டிய பெரியார், அது இந்தியாவில் தோன்றாமைக்கு காரணங்களைக் காட்டுகிறார். 'இந்த நியாயப்படி பார்த்தால் அவ்வித சமதர்ம உணர்ச்சி உலகில் ரஷியா தேசத்தைவிட இந்தியாவுக்கே முதன்முதலாக ஏற்பட்டு இருக்கவேண்டியதாகும். ஆனால் அந்தப்படி ஏற்படாமல் இருப்ப தற்கு இங்கு அநேகவித சூழ்ச்சிகள் நடைபெற்று வந்திருப்பதாலும் சூழ்ச்சிக்காரர்கள் இந்திய மக்களை வெகு ஜாக்கிரதையாகவே, கல்வி, அறிவு, உலகஞானம், சுயமரியாதை உணர்ச்சி, முதலிய வைகள் பெறுவதற்கு மார்க்கம் இல்லாமல் காட்டுமிராண்டித் தன்மையில் வைத்து வந்ததோடு கடவுள்பேரிலும் மதத்தின்பேரி லும் ஏற்படுத்தப்பட்ட உணர்ச்சியானது அடிமையாக இருப்பதே கடவுள் சித்தமென்றும் மோட்ச சாதனமென்றும் புகட்டிவந்த தாலும் அதே சூழ்ச்சிக்காரர்கள், அடிக்கடி, வேற்றரசர்களை அழைத்துவந்து மக்களை மிருகத்தனமான ஆதிக்கத்தால் அடக்கி ஆளச்செய்து வந்ததாலும், உலகில் சமதர்ம உணர்ச்சி, முதன் முதல் இந்தியாவிலேயே ஏற்பட்டிருக்கவேண்டியது மாறி, ரஷியா வுக்கு முதல் ஸ்தானம் ஏற்படவேண்டியதாயிற்று. சமதர்ம ஆட்சிக்கு மிகவும் தேவை இயந்திரமயமான தொழில் முறை. அத்தகைய தொழில் முறை இந்தியாபோன்ற மக்கள் பெருகிய நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் பெருக்கும் என்று பலர் சொல்வதுண்டு. அதுபற்றி பெரியாரின் கருத்து இதோ: . இயந்திரம் பெருகுவதால், தொழிலாளிக்கு வேலை இல்லாமல் போய்க் கஷ்டம் வரும் என்பதற்குச் சமாதானம் சொல்லியாக வேண்டும். தொழிலாளி என்று ஏன் ஒரு கூட்டம் இருக்க
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/86
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை