பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமதர்மப் பணி 75 வேண்டும்? முதலாளி என்று ஏன் ஒரு கூட்டம் இருக்கவேண்டும்? இது யார் கட்டளை? என்ன அவசியத்தைப் பொறுத்தது? மற்றும் பாடுபடுபவன்- சோம்பேறி, கஷ்டப்படுகிறவன் சுகம் அனுபவிக்கிறவன், ஏமாற்றுபவன்-ஏமாறுபவன் என்பனபோன்ற பிரிவுகள், மனித வாழ்க்கையில் இருக்கும்படியாகவே வாழ்க்கைத் திட்டத்தை வகுக்கவேண்டும் என்பதற்கு ஏதாவது அவசியமும் ஆதாரமும் உண்டா? மனிதன் தொழில் செய்வது என்பது மனித வாழ்க்கையின் நலம் அல்லது தேவையின் அவசியம் என்பதற்காகவா? அல்லது முதலாளி, மிராசுதாரன், ஆகியவர்கள் வேலை செய்யாமல் சம்பாதிக்கவோ, பணம் சேர்க்கவோ வேண்டிய அவசியத்திற்காகவா? 'இந்த மூன்று கேள்விகளுக்கும் பதில் அறிந்தோமானால் வேவை என்பதும் வேலையில்லாத் திண்டாட்டம் என்பதும் ஒருவனை ஒருவன் இந்த முறைகள் கொடுமைப்படுத்துவதால்தான் என்பதும் விளங்கிவிடும். 'சாதாரணமாக நம்முடைய ஏழ்மை நிலையை எடுத்துக்கொண் டால் கடந்த யுத்தத்திற்கு முன் எவ்வளவு ஏழ்மை நிலை இருந்ததோ, அதைவிட அதிகமான ஏழ்மை நிலையும் சோற்றுக்கும் துணிக்கும் வீட்டுக்கும் பண்டங்களுக்கும் கஷ்டமும் தரித்திரமும் இருப்பதோடு பணக்காரர்களின் நிலையைப் பார்த்தால் முன்புள்ள பணக்காரர் நிலையும் இப்போதுள்ள பணக்காரர் நிலையும் முன்பு பத்தாயிரக்கணக்கில் வைத்திருந்த பணக்காரர்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இப்போது அவர்கள் இலட்சக்கணக்கிலும், இலட்சக்கணக்கில் வைத்திருந்தவர்கள் பல இலட்சக்கணக்கிலும், பல இலட்சக்கணக்கில் வைத்திருந்தவர்கள் கோடிக்கணக்கிலும் பணக்காரராய் இருக்கிறார்கள்.' பிறகு இயக்கப் பிரச்சாரம் சமதர்மக் கொள்கையையும் சேர்த்துக்கொண்டது. பகத்சிங்கின் சமதர்மப் பிடிப்பு இதற்கிடையில் 1931ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 27ஆம் நாள் லாகூர் மத்திய சிறையில் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய மூவரும் தூக்கிலிடப்பட்டனர். என்ன குற்றத்திற்காக? ஆங்கில ஆட்சியை எதிர்க்கும் வகையில், லாகூரின் ஆங்கிலேய துணை சூப்பிரண்டெண்ட் சாண்டர்சை இம்மூவரும் சதிசெய்து கொன்றார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டார்கள். அக்குற்றச்