76 புரட்சியாளர் பெரியார் சாட்டு மெய்ப்பிக்கப்பட்டதாக வழக்கு மன்றம் முடிவு சொல் லிற்று; தூக்கு தண்டனை கொடுத்தது. ஈ.வே. ராமசாமி பகத்சிங் தூக்கிலிடப்பட்டதைப்பற்றி 29-3-1931 நாளைய குடி அர'சில் தலையங்கம் எழுதினார். அத்தலையங்கத்தில் 'அவர் (பகத்சிங்) தனது கொள்கையை நிறை வேற்றக் கைக்கொண்ட முறைகளில் சிறிது தவறு நேர்ந்துவிட்டது என்பதாக நம் புத்திக்குத் தோன்றியபோதிலும் அவருடைய கொள்கை குற்றமுடையது என்று சொல்ல, நாம் ஒருக்காலும் துணியவே மாட்டோம். அதுவேதான் உலகத்தின் சாந்த நிலைக் கொள்கையுமாகும். நாம் அவரை (பகத்சிங்கை) ஒரு உண்மை யான மனிதர் என்று சொல்லுவோம்' என்று பாராட்டினார். மேலும் 'இந்தியாவுக்கு பகத்சிங் கொள்கைதான் உண்மையாக வேண்டியது என்பது நமது பலமான அபிப்பிராயம் ஆகும்' என்று பறை சாற்றினார். பகத்சிங்கின் கொள்கை என்ன? சமதர்மமும் பொது உடைமையுந் தான் அவருடைய கொள்கை. பகத்சிங் கடவுள் நம்பிக்கை இல்லாதவர். பகத்சிங்கின் பொது உடைமைக் கொள்கையை ஏன் ஆதரிக்கவேண்டுமென்பதற்கு பெரியார் அருமையான விளக்கங்கொடுத்தார். இதோ அவ்விளக்கம்: 'நாம் தீண்டாமை ஒழிய வேண்டுமென்று சொல்லுவதில் என்ன தத்துவம் அடங்கி இருக்கின்றதோ, அதுதான் மக்களின் ஏழ்மைத் தன்மையை ஒழிக்கவேண்டுமென்பதிலும் அடங்கி இருக்கின்றது. தீண்டாமை ஒழிவதாயிருந்தால் எப்படி மேல் சாதி, கீழ் சாதி தத்துவம் அழிந்துதான் ஆகவேண்டும் என்கிறோமோ, அது போலவே தான் ஏழ்மைத் தன்மை ஒழிவதாயிருந்தால், முதலாளித் தன்மை, கூலிக்காரத் தன்மை ஒழிந்து தான் ஆகவேண்டும் என் கிறோம். ஆகவே, இந்தத் தன்மைகள் மறைபடுவதுதான், சமதர்மத் தன்மை, பொது உடைமைத் தன்மை என்பவைகளே ஒழிய வேறில்லை. இப்படி விளக்கிய பெரியார் 'பகத்சிங் இந்திய மக்களுக்கு ஏன் உலக மக்களுக்கே உண்மையான சமத்துவமும் சாந்தியும் அளிக்கத்தக்க பாதையைக் காட்டுவதற்குப் பயன்படத்தக்கதாக தனது உயிரைவிட நேர்ந்தது சாதாரணத்தில் வேறு எவரும் அடையமுடியாத பெரும் பேறு என்றே சொல்லி, பகத்சிங்கை மனமார வாயார கையாரப் பாராட்டுகின்றோம்! பாராட்டு கின்றோம்!! பாராட்டுகின்றோம்' என்று எழுதினார். இது ஆங்கில ஆட்சியின் கண்களை உறுத்துவது இயற்கைதானே.
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/88
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை