சமதர்மப் பணி 77 1931ஆம் ஆண்டு ஆகஸ்டில் விருதுநகர் மூன்றாவது சுயமரி யாதை வாலிபர் மாநாட்டில் நிறைவேறிய முதல் முடிவு என்ன? "சமதர்ம தத்துவமும் பொது உடைமைக் கொள்கையும் நாட்டில் ஓங்கவேண்டும் என்பதே நமது இலட்சியமாயிருக்கின்றபடியால், விதி, கடவுள் செயல் என்பனபோன்ற உணர்ச்சிகள் மக்கள் மனதி லிருந்து ஒழிக்கப்படவேண்டும்' என்பது. 'வர்ணாசிரமத்திலும் கடவுள் செயலென்பதிலும் நம்பிக்கை கொண்டிருக்கிற யாராலும் மக்களுக்கு சமத்துவமும் விடுதலையும் அடையும்படி செய்யமுடியாது என்று இந்த மாநாடு உறுதியாகச் சொல்லுகிறது'-இது மூன்றாம் முடிவு. சமதர்மம்: நீண்டகால குறிக்கோள் உ சீரிய சிந்தனையாளராகிய ஈ. வே. ராமசாமி, காங்கிரசை விட்டு விலகிய பிறகு, வகுப்புரிமை கோரிக்கையில் ஓரளவு வெற்றி பெற்று விட்டார். ஆயினும் அது, இடைக்கால நிவாரணமே; நீண்டகால மருந்து, சமதர்மம், என்பதை அவர் விரைவில் உணர்ந்துவிட்டார். அவ்வுணர்வு, ஈ. வே. ராமசாமியின் சோவியத் நாட்டுப் பயணத் திற்குப் பின் கொழுந்துவிட்டு எரியத் தலைப்பட்டது. 1932ஆம் ஆண்டு சோவியத் நாட்டிலிருந்து திரும்பி வந்த பிறகு அந்நாட்டில் சமதர்ம முறையின் சிறப்புகள்பற்றி அரிய செய்திகளை, உண்மைகளை 'குடி அரசு' வாயிலாக தமிழ் மக்க ளிடையே பரப்பி வந்தார். சோவியத் நாட்டிலிருந்து திரும்பிய ஈ. வே. ராமசாமி, 1932 டிசம்பர் 28,29 நாட்களில் ஈரோட்டில், சுயமரியாதை இயக்க ஊழியர்கள் கூட்டத்தைக் கூட்டினார். இந்திய கம்யூனிஸ்ட் இயக்க முன்னோடிகளில் ஒருவராகிய, தோழர் மா. சிங்கார வேலரை அழைத்துச் சேர்த்துக்கொண்டார். எல்லோருடனும் கலந்து சுயமரியாதை இயக்கத்தின் அரசியல் பிரிவாக, சமதர்மக் கட்சி ஏற்படுத்த முடிவுசெய்யப்பட்டது. அக்கூட்டத்தில் 'சுயமரி யாதை இயக்க சமதர்ம'த் திட்டம் உருவாயிற்று. அப்புரட்சிகர மான திட்டத்தின், முதல் முடிவைப் பாருங்கள். பிரிட்டிஷ் முதலிய எந்தவித முதலாளித் தன்மைக் கொண்ட ஆட்சியிலிருந்தும் இந்தியாவை பூரண விடுதலை அடையச் செய்வது. அடுத்து என்ன? சுதேச சமஸ்தானங்கள் என்பவைகளையெல் லாம் மாற்றி இந்தியா முழுவதையும் தொழிலாளிகள், குடியான
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/89
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை