viii - நூன்முகம் சென்னைப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக இருந்த நான், 17-9-1973 அன்று சென்னை பெரியார் திடலில் நடந்த பெரியார் பிறந்தநாள் விழாவின்போது. மிருந்து பத்தாயிரம் ரூபாய்களுக்கான பெற்றேன். தந்தை பெரியாரிட காசோலையை நேரில் என் துணை வேந்தர் பதவிக் காலத்தில் ஏற்பட்ட பல்வேறு அறக் கட்டளைகளின் விதிமுறைகளைப்போல், இக்கட்டளையின் விதி களும் அமைவதில் சிறிது தயக்கம் ஏற்பட்டது. அதனால் தாமதம் ஏற்பட்டது. இல்லையேல், பெரியார் தொடர் சொற்பொழிவுகள், என் பதவிக் காலத்திலேயே தொடங்கியிருக்கும். அந்நிலையில், இச்சொற்பொழிவின் முதல் பொழிவை நான் ஏற்றுக்கொண்டிருக்க முடியாது. இப்பெருமை, மற்றோர் தக்காரைச் சேர்ந்திருக்கும். பொழிவு ஆங்கில மொழியில் அமைந்திருக்கவும்கூடும். விதிமுறைகள்பற்றி எப்படியோ முளைத்த தயக்கமும் தவக்க மும் பெரியார் சொற்பொழிவுத் தொடக்கத்தை அம் மாமனிதரின் நூற்றாண்டு விழாவோடு இணைத்துவிட்டது. பள்ளியறியாத சிறிய பட்டிக்காட்டில் பிறந்த எனக்கு கல்லூரிப் படிப்பின்மேல் நாட்டமும் ஆர்வமும் ஊட்டி வெற்றிபெறச் செய்த வர், தந்தை பெரியார். என்னை மட்டுமா படிப்பாளியாக்கினார்? இலட்சக்கணக்கான மக்களை பெரும் பட்டங்கள் பெறும் அளவிற்கு உந்தியவர், பள்ளிப் படிப்பையும் முடிக்காத பெரியார் ராமசாமியே ஆவார். அறுபது வயதுவாக்கில் வாழும் நாம் அனைவரும் பிறந்தது எந்தச் சூழலில்? எட்டி இருந்து, இணையாது வாழ்ந்த, தனித் தனிச் சாதிப்பற்று சூழலில் வளர வேண்டியவர்களாக இருந்தோம். பெரிய சாதி என்னும் உணர்வில் முன்னணியில் இருந்த சிறிய தொரு பிரிவில் பிறந்து வளர்ந்தவன் நான். அப்படிப்பட்ட என்னை இளமைப் பருவத்திற்கு முன்பே ஆட்கொண்டு, புதிய மனிதனாக்கி விட்டார். எந்த அளவு புதிய மனிதனாக்கிவிட்டார். தந்தை பெரியாரே கூறட்டும். சாதியில் சைவராயிருந்தும் எந்தத் துறையிலும் எந்தச் சந்தர்ப் பத்திலும் சாதி உணர்ச்சியைக் காட்டினார் என்று சொல்ல முடியாத அளவுக்கு நடந்து வந்திருக்கிறார்' என்றும் நான் சொல்லக் கூடும். 'அறிவுத்துறையில் பெரும் பகுத்தறிவு வாதியாகவும் சமுதாயத் துறையில் உண்மையாகவே சமதர்ம வாதியாகவும் இருந்து வந்திருக்கிறார்.'
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/9
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை