சமதர்மப் பணி 81 யும் குறையச் செய்து வந்திருக்கிறது. உயர்ந்த சீர்திருத்தங்களுக் கெல்லாம் உதவியாக நின்றுவருவது நம் 'குடி அர”சே.' அடக்குமுறை மதங்களின்மேல் வைத்துள்ள பற்று குடி அரசின் கட்டுரை களால் குறைவு பெற்று வருவதற்கு சந்தேகமில்லை. இன்று நமது இயக்கம் தமிழ் நாட்டிற்கு ஒரு பெரும் சண்ட மாருதமெனக் கருதும்படி ஆயிற்று' என்று பாராட்டி எழுதினார். 'குடி குடி அர'சில் சமதர்ம உள்ளடக்கம் அதிகமாக, அதிகமாக, இந்திய அரசும் சென்னை மாகாண ஆட்சியும் கலக்கம் கொண்டன. சமதர்மப் பிரசாரத்தைத் தடை செய்ய விரும்பியது. எனவே 'குடி அரசு' அலுவலகம் காவல்துறையால் சோதனை இடப் பட்டது. அதற்கு காப்புப் பணம் கேட்கப்பட்டது. பெரியார் ‘குடி அரசு’க்குக் காப்புப் பணம் கட்ட விரும்பவில்லை. 'குடி அரசை' நிறுத்திவிட்டு 'புரட்சி' என்ற வார இதழைத் தொடங் கினார். அது தன் பெயருக்கேற்ப, சமதர்மக் கொள்கைக்காக சூடான கட்டுரைகளைத் தாங்கி வந்தது. அதுவும் அடக்கு முறைக்கு ஆளானது. எனவே, அதற்குப் பதில் 'பகுத்தறிவு' வார இதழ் வெளியாயிற்று. இன்றைய ஆட்சி ஏன் ஒழியவேண்டும்? என்று எழுதியதற்காக ராமசாமிப் பெரியாரும், கண்ணம்மாளும் கைது செய்யப் பட்டார்கள். அவர்கள்மேல் 'அரசு வெறுப்பு' வழக்குத் தொடரப் பட்டது. 30-12-1933இல் தண்டிக்கப்பட்டார்கள். மீண்டும் பெரியார் சிறை வாழ்க்கை மேற்கொண்டார். 1933ஆம் ஆண்டு பெரியார்மீது இ.பி.கோ. 124-A செக்ஷன்படி பொது உடமைப் பிரச்சாரத்திற்காகவும் 'இராஜ நிந்தனை என்பதற்காகவும் கோவையில் வழக்கு தொடர்ந்தது, அன்றைய அரசு. மாவட்டத் தலைவர்முன் பெரியார் தாக்கல் செய்த அறிக்கை, அவர் கொள்கை நடைமுறை விளக்கம் தருவதாக அமைந்துள்ளது. 'நான் 7,8 ஆண்டுகளாகச் சுயமரியாதை இயக்க சமதர்மப் பிரச்சாரம் செய்துவருகிறேன். சமூக வாழ்வி லும், பொருளாதாரத்திலும் மக்கள் யாவரும் சமத்துவமாய் வாழ வேண்டுமென்பது அப்பிரச்சாரத்தின் முக்கிய தத்துவமாகும். . 'நாட்டில் உற்பத்தியாகும் பொருள்களை நாட்டு மக்கள் அனை வரும் சமமாய் அனுபவிக்கவேண்டுமென்பதும் அவ்வுற்பத்திக்காக செய்யப்படவேண்டிய தொழில்களில் நாட்டு மக்கள் எல்லோரும் 6
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/93
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை