82 புரட்சியாளர் பெரியார். சக்திக்குத் தக்கபடி பாடுபடவேண்டுமென்பதும் அத்தத்துவத்தின் கருத்தாகும். 'பல நூற்றாண்டுகளாக உலக வாழ்க்கையில் கடவுள் செயல் என்றும், இயற்கை என்றும் கருதும்படியாகச் செய்து நிலைநிறுத் தப்பட்டு நடைபெற்றுவரும் சமூக அமைப்பையும் பொருளாதார முறையையும் மாற்றுவது என்பது சிலருக்கு விரும்பப்படாத காரியமாய் இருந்தாலும் அவற்றை மாற்றி அமைத்தாலொழிய மக்கள் வாழ்க்கையிலுள்ள அநேக இன்னல்களும், குறைகளும் நீங்கி நலமாகவும் திருப்தியாகவும் வாழமுடியாதென்பது உறுதி. இப்படிப்பட்ட ஒரு மாறுதல் உண்டாக ஆசைப்படுவதும் அதற் காகப் பலாத்காரம், துவேஷம், இம்சை ஆகியவைகள் இல்லாமல் பிரச்சாரம் செய்வதும் குற்றமாகாது' என்று விளக்கினார். ஈ.வே.ரா.பெரியார் பெரியார் 1933இல் சுயமரியாதை சமதர்மத் திட்டத்தை தீட்டிப் பரப்பியது அனைத்திந்திய அரசியல் வட்டாரங் களைக் கவர்ந்தது. திரு.ஜெயப்பிரகாச நாராயண், ஈரோட்டிற்கு வந்து, பெரியார் வீட்டில் தங்கி, கலந்துரையாடி, பெரியாரை தமது கட்சியில் சேரும்படி அழைத்தார் என்பதை இங்கே குறிப்பிடுவது பொருத்தம். ஈ.வே. ராமசாமி சுயமரியாதை இயக்க சமதர்மத் திட்டத்தை 23-9-34இல் சென்னையில் நடந்த நீதிக்கட்சி மாநாட்டுக்கு அனுப்பி வைத்தார். அதன் படியை இராசகோபாலாச்சாரியாருக்கு அனுப்பி னார். இத்திட்டத்தை ஏற்றுக்கொள்ளும் கட்சிக்கு சுயமரியாதை இயக்கம் ஆதரவு தரும் என்று ஈ. வே. ரா. அறிக்கை வெளியிட்டார். காங்கிரசு ஏற்றுக்கொள்ளவில்லை. நீதிக் கட்சி 1934ஆம் ஆண்டு நடந்த மாநாட்டில் இத்திட்டத்தை பரிசீலிக்க ஒரு குழுவை நியமித் தது. அக்குழு இதை ஆய்ந்தது. பின்னர் 1935ஆம் ஆண்டு நீதிக் கட்சி ஏற்றுக்கொண்டது. ஏமாற்றமடைந்த இராசகோபாலாச் சாரியாரால் 'நீதிக் கட்சியால் இதை எப்படி ஜீரணிக்க முடியும் என்று கிண்டல் செய்யமட்டுமே முடிந்தது. இதற்கிடையில் இந்திய அரசின் முடிவுப்படி சென்னை மாகாண ஆட்சி சமதர்ம இயக்கமாக விரைந்து வளர்ந்து வரும் தன்மான இயக்கத்தை அடக்கி ஒடுக்கிவிடுவதென்று முடிவுசெய்துவிட்டது. அதையொட்டி 29-1- 35 இல் சென்னை மாகாண அரசு பெரியாரின் 'பகுத்தறிவு' பத்திரிகைக்கும் உண்மை விளக்கம் அச்சகத்திற்கும் 2000 ரூபாய் ஜாமீன் கேட்டது. அலுவலகம் சோதனைக்குள்ளா கியது. பெரியாரின் அண்ணன் ஈ. வே. கிருஷ்ணசாமியின்மேல் வழக்குப் போட்டு தண்டனை கொடுத்தார்கள்.
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/94
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை