பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமதர்மப் பணி 83 சமதர்மப் பிரச்சாரத்தை அடக்கும் அரசின் நடவடிக்கைகள் இயக்கத்திற்கு ஒரு நெருக்கடியை உருவாக்கியது. சமதர்மப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து செய்ய முயன்று சிறைக்குள் அடை பட்டு, பழைய தொண்டையும் செய்யமுடியாமல் நின்றுவிடுவதா? சாதியொழிப்பு, தீண்டாமையொழிப்பு போன்ற சமூக தொண்டு களுக்கும் இடையூறாகிவிடுவதா? இக்கேள்விகள் எழுந்தன. 1936ஆம் ஆண்டு மார்ச் திங்கள், தஞ்சை மாவட்ட அய்ந்தாவது சுயமரியாதை மாநாட்டில் பேசிய, ஈ. வே. ராமசாமிப் பெரியார், 'நான் ரஷியாவுக்குப் போவதற்கு முன்பே, பொது உடமைத் தத்துவத்தை சுயமரியாதை இயக்கத்துடன் கலந்து பேசிவந்தது உண்மைதான். ரஷியாவில் இருந்து வந்தவுடனும் அதை இன்னும் தீவிரமாகப்பிரச்சாரம் செய்ததும் உண்மைதான். ஆனால், சர்க்கார் பொது உடமைக் கொள்கைகள் சட்ட விரோதமானது என்று தீர்மானித்து நமது சுயமரியாதை இயக்கத்தையும் அடக்கி ஒடுக்கி ஒழித்துவிடவேண்டும் என்று கருதியிருக்கிறார்கள் என்று உணர்ந்த பிறகு, எனக்குப் புத்திசாலித்தனமாக சில காரியம் செய்யவேண்டியதாக ஏற்பட்டுவிட்டது. 'இந்த நிலையில், சுயமரியாதை இயக்கத்தை ஒழித்துவிட்டு, நான் மாத்திரம் வீரனாக ஆவதற்கு ஜெயிலுக்குப்போய் உட் கார்ந்துகொள்ளுவதா?' என்று கேட்டார். 'அஸ்திவாரத்தில் கையை வைத்து சாதிகளை ஒழிப்பதற்கு இன்று இந்த நாட்டில் சுயமரியாதை இயக்கத்தைத் தவிர வேறு எந்த இயக்கமும் இல்லை என்பதை நன்றாய் ஞாபகத்தில் வையுங்கள்' என்று 23-3-36 இல் பட்டுக்கோட்டையில் பெரியார் பேசினார். 'சமதர்ம வளர்ச்சிக்குப் பிற பக்கங்களிலும் ஆட்கள் கிடைக்க லாம். சாதியொழிப்புக்குத் தன்மான இயக்கம் மட்டுமே போராடுவ தால், அவ்வியக்கத்தைக் காப்பாற்றிப் பயன்படச் செய்வது அப்போதைக்கு முன்னுரிமை உடையதாகுமென்று பெரியாராலும் சுயமரியாதை இயக்கத்தாலும் முடிவுசெய்யப்பட்டது. படியே சில ஆண்டுகள் இயங்கிவந்தது. அதன் விடுதலை பெற்ற இந்தியாவில், சென்னை மாநிலத்தில், பொது உடமைவாதிகளை அடக்கி ஒடுக்கிவிட, அப்போதைய காங்கிரசு ஆட்சி 1948-49 ஆண்டுகளில் மும்முரமாகப் பாடுபட்டது. அந் நிலையில் பொது உடமைவாதிகள் சொல்லொணாக் கொடுமை களுக்கு ஆளானார்கள். சேலம் சிறையில் குருவிகளைச் சுடுவது போல் சுட்டார்கள். வேலூர், கடலூர், மத்திய சிறைகளிலும் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. அக்கொடுமைகளை