பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 புரட்சியாளர் பெரியார் எதிர்த்து, பெரியாரும் அவருடைய கட்சியும் அவருடைய நாளிதழாகிய 'விடுதலை'யும் தொடர்ந்து போராடின. தேச பக்தர்கள்' ஆதரிக்க அஞ்சிய நிலையில், தன்மான இயக்கத்தவர்கள் பொது உடமைவாதிகளில் பலரை ஆதரித்து காப்பாற்றி வைத் தார்கள். எனவே, இரு கட்சிகளுக்கிடையே நேசமும் பாசமும் வளர்ந்தது. அதன் எதிரொலியை அடுத்து வந்த பொதுத் தேர்தலில் காண முடிந்தது. ஏறத்தாழ பத்தாண்டு காலம் செல்வாக்கோடு விளங்கும் ஒரு மக்கள் இயக்கம் -சுயமரியாதை இயக்கம் - சமதர்மத் திட்டத்தை உருவாக்கி, வெளியிட்டு, பரப்பி, நீதிக் கட்சியை ஏற்றுக்கொள்ள செய்துவிட்டதென்றால் என்ன பொருள்? அக்காலகட்டத்தில், அனைத்திந்திய காங்கிரசு. அமைப்பாக, சமதர்ம முறையை ஏற்றுக்கொள்ளவில்லை. சுயமரியாதை இயக்கம், சமுதாயச் சமத்துவத்திற்கு மட்டும் பாடுபட்டுக்கொண்டிருந்த நிலையைத் தாண்டி வளர்ந்துவிட்டது. பொருளியல் மாற்றத்திற்கு, சமதர்மத் திற்குப் பாடுபடப்போகும் முழு நிலைக்கு வளர்ந்துவிட்டது. இது எங்கே கொண்டுபோய் விடும்? நாம் எவ்வளவு அலட்சியப்படுத்தி வைத்திருந்தும், நாலு பேரிடையே விரித்துரைக்க முன்வராதிருந்தும், 'திருக்குறள்' என்னும் நூல், மேனாட்டு அறிஞர்களின் காட்சியால், மாட்சியால், முயற்சியால், இன்று உலகம் போற்றும் நூலாக மிளிர்கிறது. அதேபோல், தமிழர்களாகிய நாம் எவ்வளவு அலட்சியப்படுத்தி னாலும் எவ்வளவுதான் தமிழ்நாட்டோடு நின்றாலும், சமதர்மத் திட்டத்தை உருவாக்கிய முன்னோடி இயக்கமாக தன்மான இயக்கம் வளர்ந்த பிறகு, அனைத்திந்திய இயக்கமாக வளர்ந்து விடும். அதன் சாதியொழிப்புக் கொள்கை மற்ற மாநிலங்களுக்கும் தேவையான ஒன்றாக இருப்பதுபோலவே, அதன் சமதர்மத் திட்ட மும் இந்திய நாட்டிற்குத் தேவை. ஆகவே, சுயமரியாதை இயக்கம் இந்திய நாடு முழுவதையும் கவர்ந்துவிடக்கூடுமென்று அஞ்சினர். பலர் கால ஓட்டத்தில் குறுக்கிட்ட அடக்குமுறைகளும் நிகழ்ச்சிகளின் திணிப்புகளும் திசை திருப்பங்களும் பெரியாரின் தொண்டை, சாதி, சமய, மூடநம்பிக்கை ஒழிப்பில் தேக்கியபோதிலும் அவர் சமதர்ம முறையே மெய்யான சமத்துவத்தைக் கொடுக்கும் என்னும் முடிவி லிருந்து மாறவில்லை; அக்கொள்கையை என்றும் மறுக்கவில்லை; மறைக்கவில்லை. வாழ்நாள் முழுவதும் அவருடைய பேச்சும் எழுத்தும் மக்கள் மனதைச் சமதர்மப் பயிருக்குப் பண்படுத்தி வந்தன.