பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமதர்மப் பணி 85 13-10-1968இல் 'விடுதலை' தலையங்கத்தில் 'தனி உடமை ஏகபோக ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் கடவுள் மதக் கற்பனைகள். பொது உடமைத் தத்துவத்தில் அவற்றிற்கு வேலையில்லை' என்று குறிப்பிட்டுள்ளார். அவருடைய கடவுள், மத ஒழிப்பு முயற்சியே சமதர்மத்திற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்குவதற்கே ஆகும் என்பது வெளிப்படை. அந்நாளில் மண்ணோடு மண்ணாய் மக்கிக் கிடந்த மக்களைத் தட்டி எழுப்பி அடிதெரியக் கலக்கிய தற்கு பெரியார் பயன்படுத்திய முதற் கருவி 'குடி அரசு' என்ற வார இதழாகும்.