'குடி அரசு' இதழ் -பெரியாரின் போர்வாள் 5 காங்கிரசில் செல்வாக்கோடு இருந்த ஈ. வே. ராமசாமி. 1925ஆம் ஆண்டு மே திங்கள் 2ஆம் நாள் 'குடி அரசு' என்னும் வார இதழைத் தொடங்கினார். பெரியார் வார்த்தெடுத்த அப்படைக் கருவியின் நோக்கமென்ன? ஈ. வே. ராமசாமியின் சொற்களாலேயே அதை அறிவோம். நோக்கம் 'மற்ற பத்திரிகையைப்போல் இல்லாமல், மனதில் பட்டதைத் தைரியமாய் பொதுஜனங்களுக்கு உள்ளது உள்ளபடி தெரிவிக்க வேண்டும் என்பது எனது அபிப்பிராயம்' என்று தொடக்க விழாவில் கூறினார். 'குடிஅரசு' எதற்காகப் பாடுபடும் என்பதையும் ஈ. வே. ராமசாமி முதல் இதழிலேயே விளக்கினார். 'ஒவ்வொரு வகுப்பும் முன்னேற வேண்டும். அதை அறவே விடுத்து, வெறும் தேசம் தேசம், என்று கூக்குரலிடுவது எமது பத்திரிகையின் நோக்கமன்று.' 'மக்களுக்குள் சுயமரியாதையும் சமத்துவமும் சகோதரத்துவமும் ஓங்கி வளரவேண்டும். ' 'உயர்வு, தாழ்வு என்னும் உணர்ச்சியே நமது நாட்டில் வளர்ந்து வரும் சாதிச் சண்டை என்னும் நெருப்புக்கு நெய்யாய் இருப்பதால் இவ்வுணர்ச்சி ஒழிந்து அனைத்துயிர் ஒன்றென்று எண்ணும் உண்மை அறிவு மக்களிடம் வளரவேண்டும்.' கோட்பாடு 'குடி அர'சைத் தொடங்கிவைத்தவர் எவர்? சிறந்த தமிழறிஞரும் செஞ்சொற் கொண்டலுமாக விளங்கிய திருப்பாதிரிப்புலியூர் சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமி என்ற ஞானியார் சுவாமிகள் ஆவார். அப்பெரியவர், தமது தொடக்கவுரையில்,
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/98
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை