பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/111

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

109




பரத்தினைப் பார்த்துப் பற்றிப்
பணிவித்து பயனு றாநாம்,
மரத்தினைப் பார்த்து நட்டு
மதர்ப்பாக வளர்த்தி ருந்தால்,
சிரத்தினைத் தாழ்த்தா தென்றும்
செய்நன்றி மறவா தும்நம்
தரத்தினை யுயர்த்தித் தாய்போல்
தாம்காக்கத் தவிர்த்தி டாதே!

பரத்தினைப் பாரா மல்நாம்
பற்பல படிவம் பண்ணிச்
சிரத்தினைத் தாழ்த்தி நின்று
சேர்த்திரு கையும் கூப்ப,-
ஒருத்தன்பின் னெருத்த னாய்வந்
தொன்பது நூற்றாண் டொன்றிப்
பிரத்தியான் நாட்டை யாளப்
பிடிபட்ட கரியா னோம் நாம்!