பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/61

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



காட்சி

ஒரு மருங் கிருந்தாங் கோடும்
ஊர்தியா லுவந்த என்கண்,
'திருமருங் கிருந்த தெ”ன்னத்
திகழும்நெல் கரும்பு தென்னை,
இருமருங் கிருந்தி லங்கும்
எழில்மிகு காட்சிக் கேற்ப,
வெருமருங் கிருந்த வேலி
வெளிதாண்ட விரும்பிற் றன்றே!

ஓட்டாம லோடா நின்ற
ஒப்பற்ற குதிரை, வேகம்
கூட்டாது, குறைத்தி டாது;
குவலயக் கோட்பா டொன்றப்
பாட்டாகப் பாட வந்த
பாவலன் திருவாக் கால்பா
ராட்டாகக் கூடு” மென்னும்
ஆர்வத்தி னாக்கம் போலும்!

மாந்தளிர் மேனி மாதர், -
மங்குல் நீண் டொன்றிற்’ றென்னுங்
கூந்தலி லணிந்து கொள்ளும்
குணங்குறைந் திருந்தும், கோவில்
போந்துள பொம்மைக் கன்மேல்
பொருத்துதற் கஞ்சிப் பூக்கள்
தேன்துளி விழி நீர் தேக்கித்
தேம்பிடும், அரளி வேலி !

வருபவர், செல்வோர் வாணாள்
வழியிலே கழிய வையத்
தொருபுறம் வேரை யூன்றி
யுரிமையாய் வாழ்வ தோரார்;
பரிபவம்! படியார் நம்மைப்
பார்ப்பது மெனவே பைய.
மறுபுறம் திரும்பிற் றென்னும்
மதமருக் கள்ளி வேலி!