பக்கம்:புராணப்போதை.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. புராணப்போதை வழிப்பறித் திருடன்' என்ற விருதுபெற்று வாழ்ந்து வந்தான், ஒருவன், நாட்டில். வழிப்பறி செய் வதிலே பலே கெட்டிக்காரன் அவன். தனிவழியே செல்லும் பார வண்டிகள் முதல் காலிவண்டிகள் வரை நிறுத்தி, பிரயாணிகளிட மிருந்து எதையும் பறிப்பான், அந்த வழிப்பறிக் கொள்ளைக் காரன். பிரயாணிகள் செல்லும் மோட்டார்களை நிறுத்து வான். தாலி முதல் தகர குவளை முதல், எது கிடைத் தாலும், பறித்துக்கொள்ளத் தயங்கமாட்டான், அவன். அவன் பிரபலமாகப் பெயர் பெற்றுவிட்ட, பயங் கர வழிப்பறித் திருடனாகி விட்டான். கருணை யேது மின்றிக் கன்னியரை மிரட்டுவான். கனவான்கள், தனவான்கள் ஏழை-பணக்காரன் எவரிடமும் தன் கைவரிசையைக் காட்டத் தவறமாட் டான், அந்த வழிப்பறித் திருடன். திடீரென, அவன், அந்த வழிப்பறித் திருடன், ஒருநாள், ஊரிலே தோன்றினான். ஊராரைக் கூட்டமாகக் கூட்டி வைத்துத் தனக்கு 'நாணயஸ்தன்' என்ற பட்டத்தைக் கொடுத்து, தன்னி டம் நம்பிக்கை தெரிவிக்குமாறு கேட்டான். ஊராரும் 'சரி' என்றனர். கேலியா செய்கிறாய், கருணாநிதி, கதையாம் கதை கருத்தற்ற கதை இதையும் நம்பத்தான் வேண்டுமா, நாங்கள்?' என்று சலிப்படையாதீர்கள். 10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராணப்போதை.pdf/11&oldid=1706060" இலிருந்து மீள்விக்கப்பட்டது