பக்கம்:புராணப்போதை.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருணா நிதி சர்வசாதாரணமாக இத்தகைய நிகழ்ச்சிகள் நாட் டில் நடக்கின்றன என்பதை நீங்களே ஒப்புக்கொள்வீர் கள். கொஞ்சம் பொறுங்கள். மூன்றாவது குட்டிக்கதை யையும் கூறிவிடுகிறேன். விபசாரி- பெயர் பெற்ற விபசாரி. வாலிபர்களை வலிந்து வலிந்து பிடித்திழுத்து விபசாரியாகவே காலத் தைக் கடத்திவருபவள். இத்தகையவள் ஒருவள் வாழ்ந் தாள், ஒரு நகரில். வயது முப்பதிற்கும் மேற்பட்டது என்றாலும் வாலிப வனிதையாகத்தான் காட்சி யளிப்பாள்.வசீகரி என்று பிறர் நினைத்திடும் அளவுக்குத் தன்னைச் சிங்கா ரித்துக் கொள்வதிலே கைதேர்ந்தவள், அவள். முகத்திலே, உள்ள விழுந்துவிட்ட சுருக்கங்களைப் பவுடரும், ஸ்னோவும் பூசி மறைப்பாள். தலைவாரிப் பூச் சூடி, ஒய்யார ஆடை, அணிகள் பலப்பல விதங்களிலே அணிந்து தளுக்கிக் குலுக்கி, மினுக்கிப் போவார் வரு. வாரைக் கண்காட்டி, கைகாட்டி அழைத்திடுவாள், அந்தக் கைகாரி—வளையல் கைகாரி - வசீகரி - விபசாரி. விபசாரி என்று ஊரிலே இழித்தும் பழித்தும் எண் ணப்பட்ட பேசப்பட்ட, அவள், ஊர்மன்றத்தை ஒரு நாள் கூட்டித் தனக்குக் 'கற்புக்கரசி,' என்ற பெயரைக் களிப்புடன் சூட்டவேண்டுமென்று கேட்டுப் பெற்றாள். ஆம்; விபச்சாரிக்குத்தான் 'கற்புக்கரசி' என்ற கண்ணிய மொழி அடைமொழி யாக்கப்பட்டது அந் நகர மாந்தர்களால். 11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராணப்போதை.pdf/12&oldid=1706061" இலிருந்து மீள்விக்கப்பட்டது