பக்கம்:புராணப்போதை.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புராணப்போதை ஆச்சாரியார் அவர்கள் சொல்லுகிறார் எதை எதையோ, செய்கிறார் வேறு எவை எவைகளையோ? வேடிக்கைதான். ஆச்சாரியார் அரசியல் துறவு பூண்டு விட்டதாகப் பறை சாற்றப்பட்டது. பலப்பல பத்திரிகைகளிலும். பலர் பலவிதமாக வருந்தினர், ஆச்சாரியாரின் இத்த கைய திடீர்த் துறவுக் கோலத்தைக் கண்டு. ஆனால் எப்படியோ ஆச்சாரியார் மீண்டும் அரசிய லில் குதித்துவிட்டார், பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்வதற்காக. ஆச்சரியார் - குல்லூகபட்டர் ஆச்சாரியார், அரசிய லில் நுழைந்த விதம், அதுவும் முதலமைச்சராக நுழைந்தவிதம், குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால் கொல்லை வழியே உள்ளே புகுந்த விதம் ஒரு வேடிக்கை நிகழ்ச்சி. வேடிக்கை நிகழ்ச்சி மட்டுமல்ல, விபரீதமான நிகழ்ச்சியுங்கூட ஆம்! ஆச்சாரியார் கொல்லை வழியே புகுந்து இந்த மாகாணத்தின் முதலமைச்சராகப் பவனி வருகிறார் என்பதை மறுப்போர் யார்? யார்தான் மறுக்க முடியும். இது தனிப் பிரச்சினை. தனியாக, மிகவும் விளக்க மாக ஆராய்ந்திட வேண்டியதாகும். அதுபற்றி மீண்டும் பேசுகிறேன். இப்போது குட்டிக் கதை களுக்கு வருவோம். ஆச்சாரியார் ஆட்சிப்பீட மேறியதும் ஊர் ஊராக, நகரம் நகரமாகப் பவனிவரத் தொடங்கிவிட்டார். 14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராணப்போதை.pdf/15&oldid=1706064" இலிருந்து மீள்விக்கப்பட்டது