கருணாநிதி பலப்பல வேலைகள் அவருக்கு, முதலமைச்சர் ஆகி விட்டதும் ஏற்படுகின்றன, அரசியலிலும் சரி, அரசியல் அல்லாத காரியங்களிலும் சரி. அதுமட்டுமல்ல! இடையிடையே ஆச்சாரியார், தமது கட்சிக்கு, காங்கிரஸ் கட்சிக்குப் பலம் தேடிட, புதுமெரு கேற்றிடப் பிரச்சாரம்வேறு செய்து வருகிறார். குட்டிக் கதைகள் கூறுகிறார். பக்திப் போதனைகள் புரிகிறார். சாஸ்திரம், சம்பிரதாயம், முன்னோர் பழக்கம், வழக்கம் எதையும் துணைக்கழைத்திடத் தயங்கவில்லை ஆச்சாரியார். ஆச்சாரியார் ஆட்சிப்பீட மேறியதும், ஒரு சில திங்களுக் குள்ளேயே, மத்திய மக்கள் சபைக்குரிய இரண்டு இடங்கள் சென்னை மாகாணத்தில் காலி யாயின. மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டு, மத்திய மக்கள் சபைக்கு, டெல்லி பார்லிமெண்டுக்கு அங்கத்தினர் களைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கோவைத் தொகுதியிலும், அருப்புக்கோட்டைத் தொகுதியிலும் இந்த மாகாணத்தில். கோவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. அடுத்து அருப்புக்கோட்டைத் தொகுதி யிலும் காங்கிரசே வெற்றி பெற்றிட வேண்டுமென்று படாத பாடுபட்டனர் காங்கிரஸ்காரர்கள் எல்லோரும். 15
பக்கம்:புராணப்போதை.pdf/16
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை