புராணப்போதை ஆச்சாரியார், அருப்புக்கோட்டைத் தொகுதிக்குத் தாமே நேரில் சென்று பலமான பிரச்சாரம் செய்தார். காங்கிரசின் தியாகத்தையும், அதன் அவசியத் தையும் விளக்கி விளக்கிப் பேசினார். 'காங்கிரசே நாட்டின், 'நாட்டு மக்களின் பிரதிநிதி என்று மக்கள் நம்ப வேண்டும். நம்பி காங்கிரஸ்காரர் களையே தேர்தலில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற முறையிலே பேச்சும் எழுத்தும் காங்கிரசின் மூலை முடுக்குகளி லிருந்தெல்லாம் ஒரே மூச்சாக நடை பெற்றது. ஆச்சாரியார். தேர்தலில், அருப்புக்கோட்டைத் தேர்தலில் மக்கள் காங்கிரசுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று கேட்டார். காங்கிரஸ்தான் வெற்றிபெற வேண்டும். மக்களுக்கு அதுதான் நன்மை என்பதைப் பலவிதமாகவும் விளக்கிக் காட்டினார். இதோடு ஆச்சாரியார் நின்றுவிடவில்லை. இதைவிட மேலும் உயர்ந்து சென்றார். தம்மைத் தாமே. வலுவில், ஒரு நிர்ப்பந்த நிலைமைக்குத் தள்ளிக்கொண்டார். கொல்லை வழியே வந்ததைப் பற்றிக் கவலைப்படாத ஆச்சாரியார், அருப்புக் கோட்டைத் தொகுதியில் பேசும் போது, மக்களைப் பார்த்து, மக்களைப் பார்த்து மட்டு மல்ல, மாற்றுக் கட்சிக்காரர்களையும் பார்த்து, ஓர் அறைகூவல் விடுத்தார். தம்மை மறந்த நிலையில், தமது வாக்கு வேதவாக்கு, அருள் வாக்கு, ஞானியின் திருவாய் மொழி என்று 16
பக்கம்:புராணப்போதை.pdf/17
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை