கருணாநிதி நினைத்து மக்கள் கண்மூடி ஏற்பர், அதன்படி நடப்பர் என்று எண்ணித் தான் கூறினாரோ, யாதோ, நமக்குத் தெரியாது. ஆனால் ஆச்சாரியார், அத் தொகுதியிலே தேர்தல் கூட்டம் ஒன்றில் ஓர் அறை கூவல் விடுத்தார். மிக மிகத் தெளிவாக விடுத்தார், பொது மேடையிலே பொதுக் கூட்டத்திலே, பொது மக்களிடையே, அந்த அறைகூவலை. அருப்புக்கோட்டைத் தொகுதியிலே நிற்கும் காங் கிரஸ் கட்சிக்காரரையே, மக்கள் டெல்லி பார்லிமெண் டுக்குத் தேர்ந்தெடுக்க வேண்டும். அவரைத்தான் நிச்சய மாக ஆதரிக்க வேண்டும். இவ்விதம் ஆதரிப்பதானது ஆச்சாரியரிடம், அவரால் அமைக்கப் பட்டுள்ள மந்திரி சபையிடம் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு நல்ல தொரு எடுத்துக் காட்டு என்று கூறினார். D அருப்புக் கோட்டையிலே, காங்கிரஸ் தேவை யில்லை யென்று. காங்கிரஸ் கட்சிக்காரருக்கு ஓட்டு போடாவிட்டால், அவரைத் தோற்கடித்து விட்டால். ராஜாஜியிடம் மக்களுக்கு நம்பிக்கையில்லை என்றுதான் பொருள் படும். எப்படியும் மக்கள் காங்கிரசைத்தான் ஆதரிப்பார்கள் என்பது உறுதி- நிச்சயம். அவ்விதம் இன்றிக் காங்கிரஸ்காரர் தோற்றுவிட்டால், “நான் ராஜி னாமா செய்கிறேன் பார்." என்று வாக்காளர்களைப் பார்த்து அறை கூவல் விடுத்தார், அன்பர் ஆச்சாரியார்; வெற்றி தமதே என்ற அளவிற்கு மீறிய எண்ணத்தில். அருப்புக் கோட்டையிலே தேர்தல் நடந்தது; முடி வும் தெரிந்தது. முடிவு என்ன? 2 17
பக்கம்:புராணப்போதை.pdf/18
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை