கருணாநிதி அருப்புக்கோட்டைத் தொகுதி தேர்தல் முடிவு கிடைத் திடும் வரை? ஏன்? எதனால்? அருப்புக்கோட்டைத் தொகுதி மக்களின், வாக் காளர்களின் முடிவைப் பொறுத்தே இராஜகோபா லாச்சாரியும், அவரது மந்திரிசபையும், அதுமட்டுமல்ல, சென்னை மாகாணத்தின் காங்கிரசின் கண்ணியமும் நிலைப்பதும், நிலை குலைந்திடும் நிலையும் இருந்ததாகக் கருதப்பட்டதே! இந்தக் கருத்து, மாற்றுக் கட்சிக்காரர்கள் கட்டி விட்ட கதையல்ல, வம்பல்ல, வதந்தியுமல்ல. நாடாள வந்த மந்திரியார், ஆச்சாரியார் அவர்களே விடுத்த அறைகூவல் அல்லவா இக்கருத்து. மந்திரிசபை வாழ்வதும் வீழ்வதும், ஆச்சாரியார் அமைச்சராக இருந்திடுவதும், இல்லாது போய்விடு வதும் அருப்புக்கோட்டையிலே வாக்காளர்கள் அளித் திடும் தீர்ப்பைப் பொறுத்தே இருக்கிறது. என்னை ஆதரிக்காமலா போகிறார்கள். பார்ப்போம்; என்மீது நம்பிக்கை இல்லையென்ற கூறிவிடுவர், கவ னிப்போம் நிச்சயம் எனக்குத்தான் ஆதரவு தந்திடுவர் என்றெல்லாம் கனவு கண்டு ஆச்சாரியார், அருப்புக் கோட்டையிலே காங்கிரஸ் தோற்றுவிட்டால், என் மீதும், எனது மந்திரி சபையின் மீதும் மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்று அறிவிப்பதாகும். எனவே காங்கிரஸ் வெற்றி பெற்றே தீரவேண்டும். போடுங்கள் ஓட்டுக்களை மாட்டுப் பெட்டியில்! காட்டுங்கள் காங்கிர 19
பக்கம்:புராணப்போதை.pdf/20
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை