பக்கம்:புராணப்போதை.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புராணப்போதை சிடம் நம்பிக்கையை,' வாக்காளர்களைப் பார்த்துப் பகிரங்க அறைகூவல் விடுத்தார்! இத்தகைய சூழ்நிலையில், ஆச்சாரியாரின் ஆட்சியை யும், அவரது மந்திரி சபையையும் ஆட்டி வைத்திடும் அளவுக்கு அருப்புக்கோட்டை முடிவு - தீர்ப்பு - தேர்த லின் வெற்றி தோல்வியை நாட்டினர் முக்கியமாகக் கருதியதில் விசித்திரம் ஒன்று மில்லையே! ஆனால் இதிலே விசித்திரம் என்னவென்றால், தேர்தலிலே ஓட்டு வேட்டைக்குக் கிளம்பிக் கூட்டங் களில் பேசிவிட்டுத் திரும்ப வேண்டிய ஆச்சாரியார் அர்த்தமற்று, அவசியமுமற்று பகிரங்க அறைகூவல் விடுத்து, அருப்புக்கோட்டைத் தேர்தலுக்கே ஒரு புது மெருகு, முக்கியத்துவம் தந்துவிட்டது மட்டுமல்ல, தம்மைத்தாமே, புதியதொரு நிலையற்ற, நிம்மதியற்ற நிச்சயமு மற்ற முடிவைப்பற்றி நிச்சயமான முடிவு கட்டியது மட்டுமல்ல, முடிவிற்குக் கட்டுப்படப் போவ தாகத் தம்மைத்தாமே கட்டுப்படுத்திக்கொண்டு பகி ரங்க அறைகூவல் விடுத்ததுதான் மிகமிக விசித்திரம்! இங்கேதான், இந்த நிகழ்ச்சியைத்தான், இந்த நாடறிந்த பகிரங்க நிகழ்ச்சியைத்தான் நன்றாக நினைவில் நிறுத்தும்படி உங்களைக் கேட்டுக் கொள்ளுகிறேன். இவ்வளவு ஆர்ப்பாட்டமும், அர்த்தமும், அதி முக்கியமும் நிறைந்த ஆச்சாரியாரால் கருதப்பட்ட அருப்புக்கோட்டைத் தீர்ப்பு -தேர்தல் முடிவு வெற்றி தோல்வி பற்றிய செய்திதான் என்ன? 20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராணப்போதை.pdf/21&oldid=1706070" இலிருந்து மீள்விக்கப்பட்டது